💕💕நீயே என் இதயமடி -12💕💕

1K 53 179
                                        

மது போட்டோவை டேபிள் மீது வைக்க திரும்பும்போது அங்கே அருண் நின்று இருந்தான். மது சிரித்துவிட்டு , அவனை ஹக் செய்து போய் தூங்க சொன்னாள்.மனதிற்குள் ,' ஒரு வழிய தப்பிச்சுட்டோம் .. நல்லவேளை இந்த கண்ணாடி இங்க இருந்து அவன் வந்ததை காட்டிக்கொடுத்துவிட்டது. அதனால் நான் கொஞ்சம் பேச்சை மாற்றி ,போட்டோவையும் சரியாக வைத்துவிட்டேன்.' என்று நினைத்துக்கொண்டு தனது மொபலை எடுத்து தனசேகருக்கு கால் செய்து பேச தொடங்கினாள். பேசும்முன் எல்லா கதவையும் நன்றாக அடைத்து விட்டு பேசத்தொடங்கினாள்..

"அப்பா , நாம போட்ட பிளான் படி எல்லாமே நடந்துடுச்சு, அவனுக்கு அத்தை மேல சந்தேகம் வந்துடுச்சு"

"யாருக்கும் நம்மமேல சந்தேகம் வரலையே .."

"அதெல்லாம் இல்லப்பா .. நீங்க கரண்ட் கட் பண்ணுனது , நான் என்னோட புடவையை தீபத்துல வச்சது , அப்புறம் அந்த பால் .. எல்லாமே கரெக்ட் ஆஹ் ஒர்கவுட் ஆகிடுச்சு "..( இப்போ புரிஞ்சுஇருக்குமே இதெல்லாம் யாரு பண்ணுனான்னு ..பட் மது பாவம் .. சோ யாரும் அவளை திட்டாதீங்க )

"அப்படியா ..சூப்பர்மா ..சீக்கிரம் இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வாடா ..."

"இல்லப்பா .. கொஞ்ச நாள் ஆகணும் .. அப்போதான் அவனுக்கு என்மேல நம்பிக்கை வரும் .. அதுக்குள்ளஅத்தை என்ன பாடு பாடுபடப்போறாங்களோ.."

"பாவம் .."

"பாவம் இல்லப்பா .. தண்டனை .. ஒன்னும் தெரியாத உயிர்களை கொன்ற மகனை பெற்ற மகராசி .. அதுனால அவங்களும் கூட சேர்ந்து தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும் " என்று வெறி வந்தவள் போல் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கத்த தனசேகர் அவளை அமைதிப்படுத்தினார்..

"கோவம், பழிவாங்கறதுக்கு முதல் எதிரி .. நாம கோவப்படணும் .. அது எதிரியோட அழிவுக்கு காரணமாக இருக்கனும் .. புரியுதா .. நீ டென்ஷன் ஆகாதமா .."

"சரிப்பா " என்று இணைப்பை துண்டித்து விட்டு அவனது நினைவுகளில் முழ்கி அப்படியே உறங்கினாள்..  

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now