அருண் மது இருவரும் வேலைகளை முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்..
அருண் வீட்டில் ..,
"டேய் நைட் மணி 10 ஆச்சு , எங்கடா ஊர சுத்திட்டு வர " என்று வினவினார் தேவி ( அருணின் அம்மா )..
"உன்னோட மருமக கூட பீச் ல கடலை போட்டுட்டு இருந்தேன் "
" ஏன்டா , அதான் ஆபீஸ்ல பாக்குறீங்களே .. அப்றம் என்னடா இவ்ளோ நேரம் வர வெளில .. எனக்கு இது சுத்தமா பிடிக்கல 😠😠 "
"அம்மா ....😟😟😨"
"எனக்கு பிடிக்கல .. அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு.. இங்கேயே பேசுங்க .. லேட் ஆச்சுன்னா நான்தனா அண்ணாகிட்ட (மது பாதர் )சொல்லி இங்கேயே ஸ்டே பண்ண சொல்லிடுறேன் 😃😃"
"மம்மின்னா மம்மி தான் ..😃😃 ... ஆனால் உன்னோட மருமக கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தங்குறது உங்க வீட்டுக்கு வரது எல்லாம் நல்லாயிருக்காது ஒரு லெக்ச்சர் ஆரம்பிச்சுடுவா "
" அவ யாரு என்னோட மருமகளாச்சே 😄😄😄என்ன மாறி அறிவாளியா நாலும் தெரிஞ்சவளத்தான் இருப்பா ,கொஞ்ச நாள்ல மேரேஜ் ஆகப்போகுதே .. அதுக்கு அப்புறம் எப்படியும் இதுதான் நம்ம வீடுனு அவளுக்கு தெரிஞ்சுஇருக்கு " என்று அவளை உயர்த்திப்பேசினார் .( பாவம் 😟😟 அவர்களுக்கு தெரியவில்லை .. பழிவாங்கவே அவள் அந்த வீட்டிற்கு வருகிறாள் என்று ) "
அதே நேரம் மது வீட்டில் ...,
"கண்ணம்மா , இருட்டி இவ்ளோ நேரம் வர அவனோட ஊர் சுத்தணுமா 😔😔..," என்று கவலையுடன் தனசேகர் கேட்க , " ஆமாம்ப்பா ... போயே ஆகணும்.. அவனோட உயிரா என்ன நினைக்க வைக்கணும் .. அப்புறம் அவனை விட்டு பிரிஞ்சு வலி வேதனை இதெல்லாம் அவனுக்கு தரணும்..அவன் வலில துடிக்கணும் .. அப்போதான் எனக்கு நிம்மதி கிடைக்கும். அவனமட்டுமில்லை அவனது குடும்பத்தையே சீர்குலைக்கணும் ..இப்படி ஒரு புள்ளைய பெத்தாங்களே அதுக்கு அவங்களும் தண்டனை அனுபவிக்கனும் 😡😡😠" என்று கொடூரமாக கூறிக்கொண்டே கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு அவளது அறைக்கு சென்றாள்..
தனசேகர் அவள் கூறுவதை அவளுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து சிரித்துக்கொண்டே ,'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் ' என்று நினைத்துவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றார்😉😉.
மது ரூமிற்கு சென்று கதவை அடைத்துக்கொண்டு அவளது தலையணைக்கு அடியில் இருந்த அருணின் போட்டோவை எடுத்து அதை பார்த்தாள்..கோவம் கொள்ளாமல் சற்று நிதானித்து அந்த பிரேமினுள் உள்ள இன்னொரு போட்டோவை எடுத்து ," எதுக்குடா என்ன விட்டுட்டு போனா.. நாம சந்தோசமா இருந்தோமேடா ...இப்போ நான் அனாதையா இருக்கேன்டா .. என்கிட்டேயே வந்துடுடா😭😭😭😭 " என்று பிதற்றிக்கொண்டே தூங்கினாள்.. தூக்கத்திலும் கண்ணீர் கோடுகள் அவளது கன்னத்தை வருடி அந்த போட்டோவின் மேல் விழுந்தது ..
மணமேடையில் மது மிக சந்தோசமாக இருக்கிறாள் .. மாங்கல்யத்தை எடுத்துக்கொண்டு வந்து தாலி கட்ட அவனது முகத்தை பார்த்து அதிர்ச்சியாகி வேண்டாம் என்று கத்துகிறாள்.. அவன் வலுக்கட்டாயமாக தாலியை கட்டிவிட்டு அவளைத்தூக்கிக்கொண்டு செல்கிறான்..
" வேண்டாம் அருண் என்ன விட்டுடு " என்று மது கத்த , அருண் " விடணுமா விட்டுட்டேன் .. என்று அவளை கீழே போட்டுவிட பெட்டில் இருந்து கீழே விழுகிறாள்..( கனவுதான் ...)
"நடக்காது .. உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கவே நடக்காது .. அப்படி நடந்துச்சுனா உனக்கு நான் நரகம்ன என்னானு காமிக்குறேன் " என்று கத்திவிட்டு அவனது போட்டோவை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பெட்டில் படுத்தாள்..
தீடீரென்று எழுந்து அந்த போட்டோ பிரேமை எடுத்துக்கொண்டு அருணுடைய போட்டோவை வெளியே தள்ளிவிட்டு , அவனைத்தான் தூக்கிபோட்டேன் உன்னை இல்லடா .. என்று இன்னொரு போட்டோவை அணைத்துக்கொண்டு தூங்க சென்றாள் .. ( தூக்கம் வந்தாத்தானே ...)அவள் மனது பாரமாக இருந்தது..
சிறிது நேரத்தில் அருணுடைய போட்டோ பறந்து வந்து அவளது அவளது மார்பில் படுத்துக்கொண்டது.அவளும் தூங்கிவிட்டாள் . அருண் அதில் சிரித்துக்கொண்டு இருக்க தூக்கத்தில் அருணுடைய போட்டோவையும் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கினாள்..
----------
Hai frnds,
intha part eppad irunthuchu..ok ah..
Please share ur comments and votes.
By
Aditi...
YOU ARE READING
💕 நீயே என் இதயமடி 💕
RomanceHai frnds, Am back with another story................. athai pathi therinjukanumna அறிமுகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ..
