💕💕நீயே என் இதயமடி -13💕💕

1.2K 51 57
                                        

மதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துவிட்டு , ஆதி குறுக்காக நடந்துகொண்டுஇருந்தான்..

டாக்டர் அவளை செக் செய்துவிட்டு ஆதியை அவரது அறைக்கு வர செய்தார்.. அவன் பதற்றத்துடன் உள்ளே செல்ல , அவனை அமர சொல்லிவிட்டு தனது கணினி மூலம் , எதையோ பார்த்துக்கொண்டு இருந்தார்..

"டாக்டர் .. அவளுக்கு என்ன ஆச்சு "

"விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்..நீங்க பதட்ட படமா கேக்கணும் .. உங்க மனைவிக்கு பிரைன் டியூமர் வந்துஇருக்கு .. இதுல என்ன விஷயம்ன , அவர்களுக்கு கட்டி மூளைல உள்ள நரம்புல இருக்கு ."

பிரைன் டியூமர் என்று கேட்டதும் நம்பிக்கை இழந்து கண்கலங்க அவர் மீண்டும் கூற தொடங்கினார்..

"இத குணப்படுத்தலாம் .. ஆனால் நிறைய செலவாகும் .. இங்கே அந்த ஆபரேஷன் பண்ண முடியாது.. லண்டன்ல தான் பண்ணனும். இதுல முக்கியமான விஷயம் என்னனா , இந்த ஆபரேஷன் பண்ணுனாலும் அவங்க நினைவுக்கு திரும்புறது கஷ்டம்.."

"ஆபரேஷன் பன்னுலென , ?"

"ஆபரேஷன் பன்னுலென , அவங்க இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருப்பாங்க.. அவங்களுக்கு இந்த கட்டி கொஞ்சம் பெருசா இருக்கு , அடிக்கடி தலைவலி , வாந்தி ,மயக்கம் னு இருப்பாங்க .

அதிகபட்சம் 1 வருஷம் இருக்கலாம்.. அவங்கனால அந்த வலியை தாங்க முடியாது.."

"ஆபரேஷன் கு எவ்ளோ செலவாகும் "

"நீங்க லண்டன் ல போய் அங்க தங்குற செலவு , மெடிக்கல் செலவு எல்லாம் சேர்த்து 75 லட்சம் வரும்.."

"அவ்ளோவா.. "


"ஆமா .. இதுல இன்னொரு விஷயம் இருக்கு .. உங்க மனைவி ரெண்டு மாச கருவை சுமந்துட்டு இருகாங்க.. சோ எவ்ளோ சீக்கிரம் பணத்தை ஏற்பாடு பண்ணி ஆபரேஷன் அவ்ளோ சீக்கிரம் குழந்தையும் அம்மாவையும் காப்பாத்த முடியும்" என்று சந்தோச நிகழ்வை கடைசியாக கூற , ஆதியின் நிலைமை மோசமாகியது.. குழந்தை வரவை எண்ணி சந்தோசப்படுவதா அவளுக்கு பணத்தை புரட்டி ஆபரேஷன் செய்வதா என்று கதிகலங்கி நின்றான்.

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now