💕💕நீயே என் இதயமடி -13💕💕

Start from the beginning
                                        

*********************************************************************************

வளர்மதியை ஏசி வேலைவாங்கிவிட்டு , தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்..

அவனது போட்டோவை எடுத்துக்கொண்டு , "சாரி டா ..இன்னிக்கு அவங்கள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்.. நான் இப்படி இல்லேனு உனக்கு தெரியும்ல .. இருந்தாலும் அவங்க கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல ..அப்பா சொன்னமாறி பண்ணிட்டேன்.. ஆனால் அவங்கள நான் பேசுறப்போ எனக்கு கஷ்டமா இருக்குடா.. அதேசமயம் உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சாங்க, அதுக்கு தண்டனை தரணும்னு தோணுது.. எனக்கு என்ன பன்னுறதுனே தெர்ல டா ..

நீ எதுக்குடா என்ன இங்க தனியா விட்டுட்டு போன , நான் மட்டும் தனியா இந்த உலகத்துல இருந்து கஷ்டப்படுறேன்.. நானும் உன்னோடவே வந்துஇருப்பேன் .. ஆனால் உன்ன என்கிட்ட இருந்து பிரிச்சாங்களே அவங்கள பழிவாங்கணும் .. சீக்கிரமே இது நடக்கும் " என்று புலம்பிக்கொண்டு இருந்தாள்.

அருண் வீட்டிற்கு வர, வளர்மதியை சந்தித்துவிட்டு , மதுவை தேட அவளோ தூங்கிக்கொண்டு இருந்தாள்.. அவள போட்டோவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தாள்.

அருண் உள்ளேவந்ததும் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். அருண் மைண்ட்வாய்ஸ் : குழந்தைமாறி எவ்ளோ அழகா தூங்குறா.. ஹ்ம்ம் .. இன்னைக்கும்எனக்கு தூக்கம் போச்சு போல . எதுக்குடி என்ன இவ்ளோ லவ் பண்ற? உன்னோட இந்தக்கண்ணுல எப்பவும் எனக்குன்னு இருக்க காதலை பார்குறப்போ எனக்கு வானத்துல பறக்குறமாறி இருக்கு .. நீ சிரிக்குறப்போ , நான் என்னையவே மறந்து உன்ன பார்த்துட்டு நிற்க்குறேன்.. நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும் .

அருண் அவகிட்ட பேசிக்கிட்டே , அவள் பக்கத்துல போய், அவள் கன்னத்துல     இருக்க முடியை அவளது காதோரம் ஒதுக்கிவிட்டு , அவளது கன்னத்தில் முத்தமிட்டான். குழந்தைபோல சிணுங்கி , அவனது (முத்தத்தை ) எச்சிலை துடைத்துவிட்டு தூங்கினாள். அவளது சிணுங்களில் தன்னை துளைத்தவன் , மீண்டும் அவளது கன்னத்தில் முத்தமிட , அது நீண்டு அவளது நெற்றி , கண்கள் என அவனது எல்லையும் நீண்டுகொண்டே சென்றது.

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now