💕💕நீயே என் இதயமடி-5 💕💕

Start from the beginning
                                        

அவனுக்கு கோவம் ஏற, மீண்டும் மீண்டும் அவளை அழைக்க ,அவனை ரொம்ப நேரம் காக்க வைத்து காலை அட்டென்ட் செய்தாள்..

இப்போதும் அவள் ஹலோ கூறுவதுற்கு முன்பே மீண்டும் அவன் மேல கூறியவற்றை கத்திச்சொல்ல , அவள் அமைதியாக ," பேசி முடிச்சாச்சா " என்று கூலாக கேட்டாள்..

" எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க .. இப்போ நீங்க சொன்ன இந்த அருமையான விஷயத்தை நீங்க இன்னொருத்தருக்கு சொல்லணும்.. அதுக்கு முதல்ல நீங்க பக்கத்துல தண்ணி இருந்த எடுத்துகுடிங்க " என்று சொல்ல , எதிர்த்து பேசாமல், அவளது குரலுக்கு மயங்கியபடி ," தண்ணீரை குடித்துவிட்டு அமைதியாக இருக்க ,அவளோ " தண்ணி குடிக்க சொன்ன, குடிச்சுட்டேன் னு சொல்லணும் , இங்க ஒருத்தி வெயிட் பண்ணுறேன்ல " என்று அதட்டி கூற , அவனோ ," ரொம்ப ஓவர் ஆஹ் பேசுற " ,

" நீங்க பேசுனத விடவா , சரி போய் கண்ணாடி முன்னாடி நில்லுங்க "

"எதுக்கு "

"உங்க கண்ணாடி வழியா பாத்து சைட் அடிக்கத்தான் , போய் நில்லுங்க " என்று மது கூற , அவனும் தனது பாத்ரூமில் உள்ள ஆளுயர கண்ணாடியின் முன் நின்று ," சொல்லு , அங்க கண்ணாடியில் ஒருத்தவங்க தெரிவாங்க , அவங்ககிட்ட நீங்க என்கிட்ட சொன்ன எல்லாத்தையும் சொல்லுங்க . எனக்கு வேலை இருக்கு " என்று கூறி கட் செய்து விட்டாள்..

அவனும் அதை சொல்லிப்பார்க்க, நம்ம பேசுனத நமக்கே திருப்பி பேசவச்சுட்டாளே வாயாடி .. என்று கண்ணாடியை பார்த்து சிரிக்க, கோவத்தோட இருந்தேன் .. நீ கோவத்தை காமிக்காம என்ன கூல் பண்ணிட்டா.. என சிரித்துக்கொண்டே அவனது வேலைகளை பார்க்க தொடங்கினான்..

ஏனோ அந்த முகம் தெரியாத பெண்ணின் மீது அவனுக்கு ஈர்ப்பு எழுந்தது..

மதுவோ , இந்நேரம் என்ன பத்திதான் நீ யோசிச்சுட்டு இருப்பனு எனக்கு தெரியும்.. உன்ன பத்தி எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்ணிட்டுதான் நான் இங்க வந்தேன்.. இன்னும் 30 நாள் இருக்கு அதுக்குள்ள உன்னோட லவ் ஆஹ் சொல்லவைக்குறேன்..என நினைத்துக்கொண்டு அவளது வேலைகளை பார்க்க தொடங்கினாள் ..

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now