💕💕 நீயே என் இதயமடி-3 💕💕

Start from the beginning
                                        

" எனக்கு ஓகே தான் .. பட் உன்னோட வைப் பெட்ல படுத்துட்டா , யார்கூட வச்சு ஹெல்ப் பண்ணுவ " என்று அவனை பார்த்துக்கொண்டே கேட்க ..

"அதுக்கெல்லாம் ஆள் ரெடியா இருக்குடி ..நான் ம்ம் சொன்ன போதும் கியூ ல வந்து நிப்பாங்க .." என்று சட்டை காலரை தூக்கிவிட்டு மதியை பார்க்க அங்கே அவள் இல்லை..

*****************************************************************************

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

என்று பாடல் பாடிக்கொண்டு இருக்க , அருண் சோம்பல் முறித்து எழுந்தான்.. (அலாரம் டோன் தான் அது )...

எழுந்து மொபைலை எடுத்து அவளது வால்பபேரை பார்த்து சிரித்துக்கொண்டே மதுவிற்கு கால் பண்ணினான்.

"ஹ .. ஹலோ ..." என்று தூக்கத்தில் பதிலளிக்க ,

" 😘😘😘😘😘😘 பொண்டாட்டி , எழுந்திரிடி ... மணி என்னாச்சுன்னு பார்த்தியா "

"ம்ம்ம்ம்ம்ம்ம் ... பார்க்கல ..😴😴😴" என்று அவள் தூங்க

"மது , நாம ஒரு முக்கியமான இடத்திற்கு போகணும் .. கெளம்புடி செல்லம் " என்று அவளை கொஞ்சி எழுப்பி விட்டான் ..

முக்கியமான இடம் என்று சொன்னதும் மது வெடுக்கென்று எழுந்து அமர்ந்து " சரி , 10.30 க்கு வந்து பிக்கப்பண்ணிக்கோ " என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு அவனது போட்டோவை வைத்து அழுதுகொண்டு இருந்தாள்..

"உன்ன கொன்னுட்டு , அதே இடத்திற்கு என்ன கூட்டிட்டு போறான் அவன் .. அவனை நான் சும்மா விடமாட்டேன்.. அவன் துடிக்கணும் .. நீ எப்படி என் கண் முன்னாடி துடிச்சு துடிச்சு உன்ன நீயே கொல்ல பார்த்தியோ .. அதே மாறி அவனும் துடிக்கணும்.. அவன் சாகவும் முடியாம வாழவும் முடியாம வாழ்க்கையே நரகம் ஆகணும்..நான் கண்டிப்பா இத பண்ணுவேன் ..இது உன்மேல சத்தியம் ' என்று அந்த போட்டோமேல் சத்தியம் செய்து கிளம்ப தொடங்கினாள்..

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now