Marakkathe Nee Marukkathe Nee -23

720 102 107
                                    


பதினேழாம் நாள்...

காலை பத்து மணி, மும்பை பத்திரிகை அலுவலகம்.

சித்தார்த் நிராசையுடன் எதிரே அமர்ந்திருந்த பத்திரிகையின் எடிட்டரை பார்த்தான்.

"ஸாரி சித்தார்த், என்னாலே உங்களுக்கு தேவையான விவரங்களை கொடுக்க முடியாது. அது ஒருத்தரோட பாதுகாப்பு சம்பந்தமான விஷயம். இதிலே சமரசமே கிடையாது" என சொன்னார்.

"இதை எதுக்கு கேட்கிறேன் என்ற காரணத்தை உங்களிடம் சொல்லிட்டேன். எங்கப்பாவோட கொலைக்கான ஆதாரமோ, ஆவணமோ ஏதாவது இருக்குமா என்று கேட்க தான் அவரோட விவரங்களை கேட்கிறேன்" என நிராசையுடன் சொன்னான்.

"சித்தார்த். நீங்க போலிஸிடம் தான் கேட்கணும். அவங்களிடம் இல்லாத எந்த ஆதாரமும் பத்திரிகைகளிடம் இருக்காது" என அமர்த்தலாக சொன்னார்.

"போலிஸ் போக முடியாத இடத்திற்கும் பத்திரிகையால போக முடியும். உங்களுக்கு என்னை பத்தி ஏதாவது தெரிய வேண்டுமென்றால் நீங்க ஏஸிபி விக்ரமிடம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்" என்றான்.

"உங்களுக்குத் தெரியாம இருக்காது. அந்த கட்டுரை தொடரால ஒரு அரசியல் பிரமுகர் ஜெயிலுக்கு போக வேண்டியதாகி விட்டது. எங்க பத்திரிகைக்கு பெரிய நெருக்கடி கொடுத்தும், அவரை பற்றி நாங்க வெளியே சொல்லலை. இன்னும் கேட்டா, அவர் யார் என்று எங்களுக்கும் தெரியாது. எல்லாமே இமெயில் மூலமாக தான் பேசிகிட்டோம்" என்றார்.

"அவரோட முழு பெயர் என்ன?" என ஆர்வமுடன் கேட்டான்.

"பத்திரிகையில் போட்டது தான். அவர் பெயர் யசோசக்தி. அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்று கூட எங்களுக்குத் தெரியாது. அந்த கட்டுரை தொடர் எழுதியதற்கான சம்பளத்தை கூட மதுரையிலே இருக்கிற அனாதை இல்லத்திற்கு கொடுக்க சொல்லிட்டார்" என்றார்.

"ஒகே. நீங்க அவரிடம் என்னை பற்றிய விவரங்களை சொல்லி கேட்டு பாருங்க. என்னை சந்திக்க சம்மதம் சொன்னா, நான் போய் அவரை பார்க்கிறேன்" என சொல்லி விட்டு வெளியே வந்தான்.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now