Marukkathe Nee Marakkathe Nee - 1

1.5K 104 113
                                    

மறக்காதே நீ மறுக்காதே நீ – 1
பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு......

"வாங்க, வாங்க" என வீட்டினுள் நுழைந்த அகிலனையும், அமிதாவையும் வரவேற்றார் வசந்தன்.

"அங்கிள், எங்கே நம்ம மாப்பிள்ளயைக் காணோம்? காலையிலிருந்து அவனை செல்லில் கால் செய்யறேன். எப்பவும் பிஸியாகவே இருக்கு" என சோபாவில் அமர்ந்தான் அகிலன்.

"அப்படியா, லஞ்ச் சாப்பிட்டு அப்பவே மாடிக்குப் போயிட்டானே" என யோசனையாக சொன்ன வசந்தன், "ஒரு வேளை யாருகிட்டயாவது பேசிட்டிருப்பான். முக்கியமான ஆபிஸ் வேலையா இருக்கும்" என முடித்தார்.

"இல்லையே அங்கிள், அவனை ஒரு வாரத்திற்கு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்று கமிஷ்னர் சொல்லிட்டாரே, வேற யாரோட பேசிட்டிருக்கான்?" என சொன்னபடி திரும்பியவன், அமிதாவின் அனல் கக்கும் பார்வையில் தலை குனிந்தான்.

"அகில், உங்களையே மாதிரியே மத்தவங்களையும் நினைக்க கூடாது. அவங்கெல்லாம் யூனிபார்ம் கழட்டிட்டா, சாதாரண மனுஷங்களா இருப்பாங்க. இருபத்து நாலு மணி நேரமும் நீங்க மட்டும் தான் யூனிபார்ம் போட்டாலும், போடாம இருந்தாலும் போலிஸாகவே இருக்கீங்க" என எரிச்சலுடன் சொன்னாள் அமிதா.

"அப்படியில்லை அமி.." என ஏதோ சொல்ல தொடங்கியவனை சட்டை செய்யாமல், "அங்கிள், ஆண்ட்டி எங்கே?" என கேட்டாள்.

"மாடியில் சம்யு ரூமில் தான் இருப்பா" என சொல்லும் போதே, படியினில் இறங்கி வந்தனர்

"வா அமிதா, எப்போ வந்தே?" என வரவேற்றார் வினோதினி.

"இப்போ தான் வந்தேன் ஆண்ட்டி" என அவள் சொல்லும் போதே, "அண்ணி, உங்களுக்காகத் தான் காத்திட்டிருந்தேன்" என்றாள் சம்யுக்தா.

"ஹ்ம்ம்" என்று தொண்டையை சரி செய்த அகிலன், "நானும் வந்திருக்கேன்" என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

"வா அகிலன்" என புன்னகையுடன் சொன்ன வினோதினி, "உன்னை கவனிக்கலைப்பா, ஸாரி" என வருந்தும் குரலில் சொன்னார்.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now