Marukkathe Nee Marakkathe Nee - 8

712 98 126
                                    


மறக்காதே நீ மறுக்காதே நீ - 8

இரண்டாம் நாள்...

காலையில் அமிதாவின் பொட்டிக்கிற்கு வரும் போது சற்றே நேரமாகி விட்டது. அவளுக்கு முன்னதாக வந்திருந்த ரத்னா கடையை திறந்திருந்தாள். காலை நேர பரபரப்புடன் தையலகம் இயங்கி கொண்டிருந்தது.

"குட் மார்னிங் சம்யு மேம்" என மெல்லிய புன்னகையுடன் அவளை வரவேற்றாள் ரத்னா.

தன் ஸ்லிங் பேகை மேஜை மேல் வைத்து விட்டு அங்கிருந்த மடிகணிணியை உயிர்ப்பித்தாள்.

தைத்து வைத்திருந்த ஆடைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த ரத்னாவிடன், "ரத்னா, நேத்து ராத்திரி இரண்டு பேர் வந்து தைக்க கொடுத்திருந்த டிரஸ்ஸை கேட்டாங்க. அவங்க பில் கொண்டு வரலை. மொபைல் நம்பரும் தெரியலை" என சொன்னாள் சம்யுக்தா.

"அது நிறைய நடக்கிறது தான் மேம். பில் கொண்டு வர மாட்டாங்க. மொபைல் நம்பரும் மாத்தி சொல்லுவாங்க. ரொம்பவும் கறராக இருக்க முடியாது மேம். தெரிஞ்ச வாடிக்கையாளர் என்றால் அவங்க தைக்க கொடுத்த தேதியை கேட்டு, பில் நம்பர் பார்த்துக் கொடுத்துடுவோம்" என்றாள்.

அழகிய கிளாஸ் ஃபிளவர் வாஸுடன் வந்த விற்பனை பெண், அதை அவளது மேஜையின் மேல் வைத்து விட்டு சென்றாள். அதில் பிங்க் நிற ரோஜாக்களையும், இலைகளையும் அழகாக அடுக்கியிருந்தாள்.

"பியூட்டிஃபுல்" என அதை தன் கைகளால் மென்மையாக தடவிய சம்யுக்தாவைப் பார்த்து ரத்னா,, "காலையில் மேஜையில் ஒரு பொக்கே இருந்தது மேம். பார்க்கவே ரொம்ப அழகாயிருந்தது. தூக்கி போட மனசில்லாம நான் தான் அதை ஃபிளவர் வாஸில் வைக்க சொன்னேன். நேத்து நான் வீட்டுக்குப் போகும் போது இந்த பொக்கே இங்கேயில்லை. யாரு மேம் கொண்டு வந்தாங்க?" என அவள் கேட்கும் போதே தன் கையை வேகமாக இழுத்துக் கொண்டாள். நேற்றே சித்தார்த் கொடுத்த பொக்கேவை தூக்கி போடாமல் விட்ட தன் தவறை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்.

Completed - Marukkathe Nee Marakaathe NeeWhere stories live. Discover now