மெய்ப்போர்

0 0 0
                                    

கத்தியில்லை இரத்தமில்லை,
யுத்தமொன்று நடக்குது!
சாதியில்லை பேதமில்லை,
தமிழன் கொடி பறக்குது!

அடக்கி வைத்த உரிமையெல்லாம்,
உரிமையோடு மேடை எற...
முடக்கி வைத்த உணர்ச்சியெல்லாம்,
முறுக்கிக்கிட்டு கரை சேர...

இள நெஞ்சின் கொதித்துக் கிடந்த குருதி இன்று,
மள மளவென்று வெடித்து, புரட்சி-நதியாய் ஓடுதே!

இரவு பகல் பாராது கண்ணியம் காத்த காவியங்களை,
வியந்து வியர்த்து நோக்கினான் ஆதவனும்!

மக்கள் வெள்ளம் கண்டு நெகிழ்ந்த கடலரசி,
தன் பிள்ளையலைகளை, சற்றே ஓய்வும் எடுக்கச் சொன்னாள்!

இப்படியும் ஒரு போராட்டமா? என்றெண்ணி வியந்தால்...
'தொப்புள்கொடி போராட்டம் ஆயிற்றே!' என்கிறது மனம்.

நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப்போக,
புத்துயிரோடு பாய்ந்தது தமிழ் இரத்தம்!
கூடி நின்ற இலட்சம் இதயங்களில்,
புகுந்து வந்து, அவ்வானம் கிழித்தது ஒரே சத்தம்!

இது, இடி முழக்கமிடும் படை!
அணையுடைத்த காட்டாற்றின் நடை!
ஆதிக்க சக்திகளுக்கு இங்கு தடை!
பல்லாண்டு காலச் சிக்கலின் விடை!

வரலாற்றின் பக்கங்களில் இப்போராளிகளின் கீர்த்தி தீட்ட,
தமிழ்த்தாய் எழுதுகோல் எடுப்பாள்!

தன்னலத்தைத் தாரை வார்த்த இவர்தம் வீரம் பேச,
பூமாதேவி அடம் பிடிப்பாள்!

தமிழினம் - ஒரு தரைவீழா சகாப்தம்!!

(ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எழுதிய கவிதை இது)

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

(ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எழுதிய கவிதை இது).

கவிக்கிளை Where stories live. Discover now