இமைகளின் நிழலில்...

3 1 1
                                    

இமைகளின் நிழலில் நானே,
உன் பிம்பம் பார்க்கின்றேனே!
கொலுசின் இசையினாலே,
என் இதயம் இழக்கின்றேனே!

துளித்துளியாய் காலம் கடக்கிறது,
நீ என்னருகில் இல்லை யென்றால்!
விழியழகால் மனம் மிதக்கிறது,
நான் உன்னை நினைக்கும்போ தெல்லாம்!

உயிர்ச்சுடராய் எரிந்தாய்!
பசுங்கொடியாய் படர்ந்தாய்!
விரல் கொண்டு மீட்டாத வீணை,
காதல் வண்டாய் மொய்த்தேனே உன்னை!
நீ பெருங்கடலா?
என்னை மூழ்கடித்தா யல்லவா?
நான் கரும்பலகையா?
என்னில், அழியாத செய்யுள் நீயல்லவா?

பூங்காற்றைத் தேடி, சோலைக்குச் சென்றேன்!
அதுவோ உன்னை நாடி, சென்றதைக் கண்டேன்!
சில்லென்ற தென்றல், காதோரம் சீண்ட,
வில்போன்ற கண்ணோடு, பார்த்து நின்றாயே செண்டே!

கவிக்கிளை Where stories live. Discover now