உன்னிடம் தொலைந்தேன்

2 1 1
                                    

உன்னிடம் தொலைந்தேன்,
அடி பெண்ணே!
என் காதல் சொல்ல விளைந்தேன்!

புவியிலே பூத்த வானத்து தேவதையோ?
கவியிலே பாய்ந்தோடும் இன்சுவை நீயோ?
விடியலின் புத்துயிர் வாசம் நீயோ?
கொடியின் குளத்தில் பிறந்தவள் தானோ?

நிரந்தரமாக சுகம் ஈட்டும் கனவோ?
பரந்த மனக்காட்டில், நீர் நிலையோ?
கூறுவாய் என் பாதியே!
உன் பெயரை உயிரில் வார்க்கவோ?

நீதானடி என் தனிமைக் காவல்!
கண் நாடியில் உன் பிம்பத் தூவல்!
காற்றில் உந்தன் மௌனம் வந்து,
மெல்ல எனதுள்ளம் கிள்ள, இன்பச்சாரல்!

தைரியமாய் எனக்குள் நுழைந்தவளோ?
வைரமாய் என் ஆழத்தில் பதிந்தவளோ?
கண்முன்னே ஆடித் திரியும் வசந்த நதியோ?
என் காதல் ஏற்று, உயிர்ப் புகட்டிய ரதியோ?

கவிக்கிளை Where stories live. Discover now