மென் தென்றலே

4 1 1
                                    

கவிப்பேரலையில், நிலவு மிளிர்ந்திடக் கண்டேன்!
தவிப்பாழ் மழையில், மனம் முறிந்திடக் கண்டேன்!

மென் தென்றலே, கண் போன்றவளே!
இசைச்சாரலே, பூவிதழ்த்தூறலே!

நெஞ்சில் விழுந்தாய்...
செந்நீர் தேசம், விண்மீன் தேச மாகிறது!
தோளில் சாய்ந்தாய்...
மூன்று காலமும், காதல் பால மாகிறது!

திக்கெட்டிலும் உந்தன் முகம் கண்டேன்!
உயிரேட்டிலும் நின் ஞாபகம் கொண்டேன்!

அழகே!
நீ பேசும் சொற்கள் யாவும் சேர்த்து, ஆடை தரித்து,
என் பார்வையின் வண்ணம் குழைத் தளித்து,
சூரியன் உடைத்து, கற்கள் பதித்து,
அன்பளிப்பேன்!
அகங்களிப்பேன்!

கவிக்கிளை Where stories live. Discover now