விடாமல் துரத்துராளே 42

Start from the beginning
                                    

ச்சே இந்த நாய் ப்ரெண்ட்ஷிப்பை  பர்ஸ்ட் கட் பண்ணனும்ப்பா  இல்ல நம்ம பொண்டாட்டி நம்மள டிவோர்ஸ் பண்ணிருவா, ஒரு வாரம் கழிச்சு இன்னைக்கு தான் அவளே நம்மளை கிட்ட வர சம்மத்திச்சா, அந்த நேரம்னு பார்த்து இந்த விவரங் கெட்ட விளக்கெண்ணெய் நொய்யு நொய்யுனு கால் பண்ணி அவளை கடுப்பாக்கி நம்மளை ரூம்மை விட்டு வெளிய தூரத்த வச்சுட்டானே, பத்து மணிக்கு மேல்ல பொண்டாட்டியோட ரொமான்ஸ் பண்றதை விட்டுட்டு நம்ம ரொமான்ஸ்க்கு கேட்டை போட்டுட்டானே என்று புலம்பிய சூர்யா தேவா வீட்டை நோக்கி காரை செலுத்தினான்..

இவன் எதுக்கு இப்ப குர்கா மாதிரி பத்து மணிக்கு மேல்ல வீட்டு வாசல்ல நின்னுட்டு இருக்கான் என்றபடி சூர்யா காரிலிருந்து இறங்க, தேவா அவனை பயங்கரமாக முறைத்தான்…

டேய் நீ பண்ண காரியத்துக்கு நான் தான் உன்னை முறைக்கனும் நீ எதுக்குடா முறைக்கிற கடுப்பாக சூர்யா கேட்க,

அவ எங்கடா? தேவா  கேட்டான்..

எவடா?

டேய் இங்க பாரு எனக்கும் அவளுக்கும் இடையில்ல ஆயிரம் இருக்கும்.. இன்னைக்கு அடிச்சுபோம் நாளைக்கு  சேர்ந்துப்போம் நீ இடையில்ல வராத என்ற தேவா பேச்சில் சூர்யா குழம்பி நின்றான்..

புரியலடா  

டேய் எதுவும் தெரியாத மாதிரி சீனை போட்ட உன்னை சாவடிச்சிருவேன்.. ஒழுங்கா அவ எங்கன்னு சொல்லு..

டேய் என்ன கூப்பிட்டு வச்சு வெறுபாபேத்துறியா, அவ அவங்கிறயே யாருடா அந்த அவ அதை பர்ஸ்ட் சொல்லு

டேய் பைத்தியம் பைத்தியம் என்னோட அவளை மட்டும் தானடா நான் அவன்னு சொல்ல முடியும்.. அவளை தான்டா நான் அவன்னு சொல்லுவேன்.. அவளை தவிர மத்தவங்களை எல்லாம் நான் ஏன்டா அவன்னு சொல்ல போறேன்.. பேச்சை மாத்தாத அவ எங்கன்னு சொல்லு,

அய்யோ சாவடிகாகிறானே எத்தனை அவ, அய்யா சாமி பர்ஸ்ட் அவ அவன்னு சாவடிக்காமா அந்த அவளோட பேர் என்னன்னு சொல்லு அப்புறம் அந்த அவ எங்க இருக்கான்னு சொல்லுறேன்..

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now