விடாமல் துரத்துராளே 29

2.2K 78 29
                                    

விடாமல் துரத்துராளே 29

வொக் வொக் வொக் வொக் என்று தியா ஹாலை ஒட்டிய அறையில் வாந்தி எடுக்க,

ஹால் ஷோபாவில் அமர்ந்து இருந்த தேவாவின் காதிலும் அந்த சத்தம் விழுந்தது… சிரித்து கொண்டு இருந்தான்… நல்லா அனுபவி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுது அந்த வாயி அதற்கு தகுந்த தண்டனை தான்  என்று மறுபடியும் சிரித்தவன் நினைவு சற்று நேரத்திற்கு முன்பு சென்றது...

காய் வண்டிகார்க்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு தியாவை உள் இழுத்து வந்தவன் 100 கேரட்டுக்கும் 100 கிராம் கேரட்டுக்குமான வித்தியாசத்தை கூறி வழக்கம் போல் அவளை திட்டி தீர்க்க,

அச்சோ தியா இப்புடி மொக்கை வாங்கிட்டியே, இருந்தாலும் இந்த சின்ன தவறுக்காக அசிங்கப்பட்டு அல்வா செய்யாமால் விட மாட்டா இந்த தியா, எவ்வளவு இடர் வந்தாலும் கேரட் அல்வா செய்ய முன் வைத்த காலை பின்னெடுக்க மாட்டேன்… தலைகீழாக தான் குதிப்பேன் என்னும் ரீதியில் தேவாவின் திட்டுகளையும் தடுப்பையும் பொருட்படுத்தமால் அல்வா கிண்டும் முயற்சியில் இறங்க,

மனைவி அல்வா கிண்டும் அழகை பார்த்தவனுக்கோ பக் என்று ஆனது… இன்னும் என்னென்ன கூத்து எல்லாம் பார்க்கனுமோ, நானே வம்பை விலை பேசி தாலி கட்டி வீடு வரை கூட்டி வந்து இருக்கேன்  என்று தன் தலையில் அடித்து கொண்டு மெத்தையில் அமர்ந்தான்...

சற்று நேரத்தில் பாவா என்றவளின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான் தேவா… வேர்க்க விறுவிறுக்க கையில் கேரட் அல்வா நிரம்பிய கிண்ணத்தை நீட்டியபடி நின்று இருந்தாள்…

உங்களுக்கு கேரட் அல்வான்னா ரொம்ப பிடிக்கும்னு அத்தைம்மா சொன்னாங்க அதான் செஞ்சேன் சாப்டுங்க பாவா என்றாள்… நேற்று வரை அவள் வீட்டில் சிறு துரும்பை கூட நகர்த்தி இருக்க மாட்டாள்..  சமையலில் அ, ஆன்னா கூட தெரியாது. இருந்தாலும் அவனுக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தெரியாத ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டு செய்து இருக்கிறாள்.. காரணம் அவனே, அவனுக்காவே, அவன் மீது அவள் வைத்திருக்கும் காதலுக்காக, அவன் மீதான அவளின் காதலை நினைக்கவே சற்று கர்வமாக தான் இருந்தது… காதலிப்பதை விட இன்னோருவரால் தான் காதலிக்க படுகிறோம் என்பதே ஒரு வகை போதை…  அந்த போதை தேவாவை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now