விடாமல் துரத்துராளே 22

1.2K 60 11
                                    

விடாமல் துரத்துராளே 22

பரபரப்பான காலை வேளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த கார் பீளமேடு நோக்கி பயணித்தது…

அந்த காரை இயக்கி கொண்டு இருந்தவனோ யார் மேல் இருந்த கோவத்தையோ கார் ஆக்ஸிலேட்டர் மேல் காட்ட அது புழுதி மணல் பறக்கும்படி பயங்கர வேகத்தில் சென்றது…

ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற, கொஞ்சம் மெதுவா போகலாம்ல என்று காரை ஓட்டி கொண்டு இருந்த ஹர்ஷவர்தன் பார்த்து சொன்னான் திவேஷ்...

அவன் பதில் கூற வில்லை திரும்பி திவேஷை ஒரு பார்வை பார்த்தான்… அந்த பார்வைக்காக அர்த்தம் நீ இவ்வளோ பயந்தா கோழியா என்ற கேலி பார்வை…

திவேஷிற்கு அந்த பார்வையின் அர்த்தம் புரிய சே சே பயமா எனக்காக, நான் இதை விட பாஸ்ட்டாவே டிரைவ் பண்ணுவேன்… ஆனா இது பீக் ஹவர்ஸ் நிறைய வண்டி வரும்…முன்னாடி பின்னாடி வரை ஏதாவது வண்டியில்ல இடிச்சுற போறேன்னு உன் மேல்ல இருக்க ஒரு அக்கறையில்ல சொன்னேன் என்று தைரியமாக வெளியே திவேஷ் காட்டி கொண்டாலும்

மனதிற்குள்ளே இவனை பத்தி தெரியாமா இந்த கார்ல்ல ஏறிட்டயேடா திவா, பேய் புடிச்ச மாதிரி கார் ஓட்றானே, இவன் போற வேகத்தை பார்த்தா, ஹாஸ்பிடலுக்கு முழுசா இந்த கார்ல்ல போய் சேர மாட்டோம் போல, ஆம்புலன்ஸ் தான் வந்து அள்ளி போட்டுட்டு போகும் போலேயே, கடவுளே முழுசா என்னை என் பொண்டாட்டி கிட்ட உயிரோட சேர்த்திருப்பா என்று ஒரு கோரிக்கையை வைத்து கொண்டே வந்தான்…

ஹர்ஷா காரை ஸ்லோவ் பண்ணு, ஏன் இவ்வளோ பாஸ்ட்டா டிரைவ் பண்ற?உனக்கு என்னாச்சு ஹர்ஷா என்று மகேஸ்வரன் கேட்க,

அதே தான் மாமா நானும் கேட்கிறேன். என்னாச்சு ஏன் இப்புடி? இதுவரை கோவையில்ல ஏன் தமிழ்நாட்டுலையே நம்பர் ஒன் இடத்தில் இருந்த நம்ம ஹாஸ்பிடல் ரேட்டிங் இப்ப கொஞ்ச நாள்ல கீழ் இறங்கி இருக்கு… அது மட்டும் இல்ல லாஸ்ட் 25 இயர்ஸா தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் நீங்க தான்… இத்தனை வருஷத்தில்ல சங்க தேர்தல்ன்னு ஒன்னு நடந்ததே இல்லை…. உங்களுக்கு எதிராக நிற்கிறதுக்கு யாருக்குமே தைரியம் இருந்தது இல்லை.. ஆனா லாஸ்ட் வீக் நடந்த தேர்தல்ல அந்த சூர்யா உங்களுக்கு எதிராக நின்னு, ஏதோதோ கோல்மால் பண்ணி ஜெயிச்சுட்டான்.. அந்த தேவாவும் சூர்யாவும் வேணும்னே உங்களையும் நம்ம ஹாஸ்பிடல் பேரையும் அசிங்க படுத்துறானுங்க… நீங்க ஏன் மாமா இதை எல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க… எனக்கு அவனுங்க இரண்டு பேர் மேலேயும் கொலை வெறி வருது என்றான்…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now