விடாமல் துரத்துராளே!! 2

1.6K 43 7
                                    

விடாமல் துரத்துராளே 2

தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த மாளிகை... அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது... 50 வருட பழைய மாளிகை தான்... ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போரை கண்களை கவரும் வகையில் அழகாக இருந்தது... அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்... xxxxx என்ற பெயரில் சொந்தமாக மூன்று மில்களும், கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார்.... அவரின் அப்பா காலத்தில் இருந்த ஒரு மில்லை இவரின் கடின உழைப்பில் விரிவுப்படுத்தி உள்ளார்....

வேதசாலம் ரொம்ப நேர்மையான மனிதர்... தனக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களிடம் இனிமையாக பழகுவார்... வீட்டிலோ, அலுவலுகத்திலோ யார் தவறு செய்தாலும் கோவம் படாமல் பொறுமையாக அவர்களுக்கு புரியும்படி எடுத்து சொல்வார்... அவருக்கு பிடிக்காது ஒரே விஷயம் ஒழுங்கின்மை... நாம் வாழும் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்... அந்த ஒழுக்கத்தை தவிர்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் முகத்தில் கூட முழிக்க மாட்டார்...

இவரின் மனைவி மீனாட்சி அந்த மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி போன்று அவ்வளவு அழகு அமைதி... வேதசாலத்திற்கு மனைவியின் பால் அன்பு அதிகம்... அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.... இவ்வளவு வருட திருமண வாழ்க்கையில் மீனாட்சி கேட்டு அவர் எதையும் மறுத்தது கிடையாது ஒரே ஒரு விஷயத்தை தவிர,

இவர்களுக்கு மூன்று புதல்வர்கள் ஒரு புதல்வி, மூத்தமகன் பெயர் ஜெயேந்திரன் வயது 35 தந்தை தொழிலை கவனித்து வருகிறார்... அவரின் மனைவி மஞ்சுளா ஒரு மகன் பெயர் தஸ்வந்த் மகள் தாமினி... இரண்டாவது மகன் தேவேந்திரன் வயது 30( நம் நாயகன்)... அடுத்து ராகவேந்திரன் வயது 28 பட்டபடிப்பை முடித்து விட்டு தந்தையின் கார்மெண்ட்ஸ்களை கவனித்து வருகிறான்... மகள் இந்துமதி கணவன் கார்த்திக் டாக்டர் கார்த்திக்கின் தந்தை மகேஸ்வரனும் டாக்டர் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளனர்....

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now