இராவணனின் சீதை 36 💖

Comincia dall'inizio
                                    

அதில் அவன் கையில் ரத்தம் கீழே சொட்ட ஆரம்பித்தது... கொஞ்ச நேரம் உட்காரு அவளை வெளியே வருவா டா... உன் கைல ரத்தம் வருது என்று சொல்ல ... தனது கையின் கட்டை வேகமாக பிரித்தவன் அவள் அறையை பார்த்து ஏதோ யோசித்து விட்டு ... அனைவரையும் பார்த்து நான் என்ன பண்ணாலும் யாரும் என்கிட்ட வரக்கூடாது என்று அந்த அறையின் கதவை வெளியே தாழிட்டான் ....

நீ சைக்கோ மாதிரி ஏதாவது பண்ணி என் ஜானுவ வருத்தப்பட வெச்ச நான் கொலைகாரனா மாறிடுவேன் என்று யாஷ் கோபத்துடன் கூற .... உன் ஜானு தான் என்னை சைக்கோவா மாத்தறது என்று கூறியவன் வேகமாக எதிலே இருந்த கிச்சனுக்கு சென்று மிளகாய் பொடியை எடுத்து வந்தான் ... இப்ப எதுக்கு மிளகாய் பொடி என்று ஜீவானந்தம் கேட்க ....‌ அது மதி காதல் தெளிவாக விழுந்தது ...

அன்று ஒரு நாள் இப்படித்தான் கையில் கத்தியை கொடுத்து கிழிக்க சொன்னதும் அதன் பிறகு அதன் மேல் மிளகாய் பொடி வைத்து அழுத்தியதும் சட்டென ஞாபகத்திற்கு வர.... வேகமாக தனது கண்களை துடைத்துக் கொண்டு எழ முடியாமல் எழுந்து கதவின் அருகே வந்தால் .... ஆனால் கண்ணிக்கும் நொடியில் டப்பாவை திறந்து கையில் உள்ள காயத்தில் மிளகாய் பொடியை கொட்டி விட்டான்.... டேய் சைக்கோ என்று யாஷ் கத்த....மீனாட்சி மற்றும் அனைவரும் ஐயோ என்று அலறினர்...

அந்த சத்தத்தில் யுகமதி வேகமாக கதவை திறக்க பார்த்தால் ...ஆனால் முடியவில்லை.... கண்கள் சிவக்க யாஷ் கூறுவது போல முழு சைக்கோவாக அமர்ந்திருந்தான் விக்ரம்... கதவை திறக்க முடியாததால் கதவு திறங்கோ நா.... நீங்க எதுவும் பண்ணாதீங்க... நான் வெளில வரேன் காயத்துல மிளகாய் பொடி போட்டா வலிக்கும்... பைத்தியக்காரத்தனமாக திரும்பவும் அதே பண்ணாதீங்கோ என்று மதி பதறியபடி கூற....

நான் எப்படி போனா உனக்கு என்னடி... எனக்கு வலிச்சா உனக்கு என்ன வந்தது இப்படியே இருந்து செத்துப் போறேன்... உனக்கு அதுதானே வேணும் என்று கத்த... சதாசிவம் மகன் அருகே நெருங்க வர முயற்சித்தார்.... ஆனால் கையில் உள்ள துப்பாக்கியை நெற்றி பொட்டியில் வைத்தவன் ... யாராவது என் பக்கத்துல வர நினைச்சீங்கன்னா நெத்தியிலேயே சுட்டுப்பேன் என்றான்... ஐயோ ஏன்னா இப்படி தப்பு தப்பா பண்றேள்....

இராவணனின் சீதை 💖Dove le storie prendono vita. Scoprilo ora