விடாமல் துரத்துராளே 25

Start from the beginning
                                    

அதுக்காக காரமடை தாண்டி ஒரு பண்ணை வீட்டுல எல்லா ஏற்பாடும் பண்ணோம் டா. கடைசியாக பாப்புவ அந்த வீட்டுல விட்டுட்டு ஆர்டர் பண்ண கேக் வாங்க நான் வெளியே வந்துட்டு திரும்ப போய் பார்க்கும் போது, தியாவை போலிஸ் ஜீப்ல ஏத்திட்டு போயிட்டாங்கடா, நானும் இங்க ஸ்டேஷன் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சா ரொம்ப தப்பு தப்பா சொல்றானுங்கடா, பாப்பு மேல்ல பிரா….

அதற்கு மேல் சூர்யா கூறிய எதையுமே தேவா கேட்கவில்லை… போனை காருக்குள் விசறியடித்து இருந்தான்… அவ்வளவு கோவம். தியா மீது அவள் தன் மீது வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதல் மீது, சூர்யா மீது, அதையும் தாண்டி அவளை ஸ்டேஷன் அழைத்து சென்ற போலிஸ் மீது அவர்களை கொல்லும் அளவு கோவம் வந்தது… அவனின் கோவம் அதிகரித்தது போன்று இதர துடிப்பும் அதிகரித்தது காரின் வேகமும் கூடியது ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய போலிஸ் ஸ்டேஷனுக்கு 15 நிமிடத்தில் வந்து சேர்ந்தான்…

காரில் இருந்து இறங்கிய வேகத்திலே தன்னருகே வந்த சூர்யாவை அறைந்து இருந்தான்… பரதேசி நாயே வயசு பொண்ணை இந்நேரத்திற்கு வெளிய கூட்டிட்டு வருவயா என்று மேலும் அவனை அடிக்க பாய்ந்த தேவாவை தடுத்த சபரி… 

சார் ப்ளீஸ் இது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சார்… பர்ஸ்ட் தியா வை வெளிய கொண்டு வரலாம் சார். அந்த ஏ.சி.பி வேணும்னே தியா வை அசிங்கப்படுத்தம்னு மோட்டிவோட தான் சார் பண்றான்… ஏன்னா தியா அப்பாவுக்கும் இந்த ஆளுக்கும் ஆல்ரெடி ப்ராப்ளம் இருக்கு சார்… அதான் சார் சான்ஸ் கிடைச்சதும் பழிவாங்க ட்ரை பண்றான் சார்… நான் எவ்வளவோ தியா வை பத்தி சொல்லி பார்த்துட்டேன் சார் கேட்கவே மாட்டேங்கிறான் சார்… பத்தாக்குறைக்கு ப்ரஸ் லோக்கல் மீடியா எல்லாம் சொல்லிட்டான் சார்…  இதை எல்லாம் கேட்டு கொண்டே ஸ்டேஷன் நோக்கி நடந்து கொண்டு இருந்தான் தேவா…

லாயர்,

கால் பண்ணிட்டேன் வந்துட்டு இருக்கார் என்று சொன்ன சூர்யா நல்ல வேளை இரண்டு ஃபேமிலியும் இப்ப வெளியூர் போயி இருக்காங்க தேவா அவங்க மட்டும் இருந்திருந்தா பிரச்சினை பெரிசா ஆகிருக்கும்ல என்று வாய் விட்டே சொல்ல, அதே நேரம் இரண்டு மூன்று கார் வந்து ஸ்டேஷன் முன்பு நின்றது.. அதிலிருந்து தியா மற்றும் தேவா குடும்பத்தினர் இறங்கி அவசர அவசரமாக உள்ளே சென்றனர்...

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now