விடாமல் துரத்துராளே 24

ابدأ من البداية
                                    

இரண்டு மாதங்களுக்கு முன்பு

அந்த பெரிய சூப்பர் மார்க்கெடில் பெண்களுக்கான காஸ்மெட்டிக் பிரிவில் தனக்கு தேவையான பொருட்களை பார்த்து கொண்டு இருந்தாள் ஹரிணி…

அப்போது யாரோ தன்னை பார்ப்பது கொண்டு இருப்பது போல் தோன்ற சட்டென நிமிர்ந்து எதிரே பார்த்தாள்…

எதிரே நின்று இருந்தவனை பார்த்ததும் அதிர்ச்சியும் ஒரு சின்ன பயமும் அதை விட அதிகமான கோவமும் வந்தது.. அவனை கண்களால் முறைத்து கொண்டே பொறுக்கி செக்ஸ் டாக்டர் என்று  வாய் முனுமுனுத்தது..

அவள் உதடுகளின் அசைவை வைத்தே என்ன சொன்னாள் என்பது புரிந்தது எதிரே இருந்த ஹர்ஷாவிற்கு,

நேற்றைய தினம் இருவருக்கும் நினைவிற்கு வந்தது…

( போன யுடி தியா ஹரிணி ஹாஸ்பிடல் சீன் நியாபகம் இருக்குல்லப்பா தியாகம் இல்லாதவங்க ஒரு எட்டு அங்கன போய் படிச்சிட்டு வந்துருங்க தங்கங்களே)

இங்க யாருங்க ஹரிணி அடுத்து நீங்க தான் உள்ளே போகனும் என்று அந்த ரிஷப்ஸனிஷ்ட் சொல்ல ஹரிணி தியா வை வெளியே இருக்கும் படி கூறி விட்டு சென்றாள்..

டாக்டர் இருந்த அறையின் முன்பு   கதவிலே ஒட்டி இருந்தது ஹர்ஷவர்தன் என்ற பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் ஹரிணி.. 

அங்கு அமர்ந்து இருந்த ஹர்ஷாவை பார்த்ததும், இவர் டாக்டரா பார்த்தா ஹிந்தி பட ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காரே என்று மனதில் நினைத்து கொண்டாள்… அவனை சைட் அடிக்கவும் ஆரம்பித்தாள்…

ஹரிணி உள்ளே வந்ததும் அவளின் கையில் இருந்த காயத்தை ஆராய்ந்து பார்த்தான். காலிலும் கூட சில காயங்கள் இருந்தது அனைத்தையும் பார்த்தவன் ஹரிணியின் காயத்தை நன்கு துடைத்து மருந்திட்டு  ஒரு டிடி இன்ஞ்சக்சன் போட்டு விட்டான்.. இறுதியாக மருந்து மாத்திரைகள் எழுதிய டிஸ்கிரிப்ஷனை அவள் கையில் கொடுத்தான். அதுவரை ஹரிணி அவனை ரசித்து கொண்டு தான் இருந்தாள்… அதை வாங்கி கொண்டவள் தாங்க்ஸ் டாக்டர் என்று கூறி விட்டு எழுந்து போக அது முடியவில்லை. அவளின் அடிபடாத மற்றோரு கையை பிடித்து இருந்தான் ஹர்ஷா…

விடாமல் துரத்துராளே!!حيث تعيش القصص. اكتشف الآن