விடாமல் துரத்துராளே!! 9

Start from the beginning
                                    

இவர்கள் இங்கு அமர்ந்து  இருக்க. அதே மாலிற்கு வந்து இருந்தனர்  தேவாவின் அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி நால்வரும். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் அருகே இருந்த திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு திரும்பும் போது மஞ்சுளா தனது மாமனார் வேதசாலத்திடம் மாலிற்கு சென்று ஷாப்பிங் செய்து விட்டு செல்லலாம் என்று கூற, வேதாசலம் தனது ப்ரியமான மருமகள் மஞ்சுவிற்காக அவரும் வந்தார்… அவர்கள் தனது ஷாப்பிங்கை முடித்து விட்டு புட் கோர்ட்டிற்குள் நுழையும் போது மஞ்சுளா கண்ணில் தேவா  பட்டான்.  மாமா உள்ள போக வேணாம் நாமா திரும்பி போயிடலாம் என்றாள் மஞ்சு.  ஏம்மா என்னாச்சு என்று வேதாசலம் கேட்க.. அங்க பாருங்க மாமா என்று மஞ்சு கை நீட்ட மற்ற மூவரும் திரும்பி பார்த்தனர்… அங்கு தேவாவும் அவனுடன் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தது பட்டது…  தேவா முகமே அவர்களுக்கு தெரிந்தது தியா திரும்பி அமர்ந்து இருந்ததால் அவள் முகம் தெரியவில்லை… ஏன் மஞ்சு அவன் இருந்தா நமக்கு என்ன அதற்கு ஏன் நாமா போக கூடாது என்று ஜெயேந்திரன் கேட்டார்… ஏங்க நம்ம மாமாக்கு ஒரு கெளரவம் மரியாதை இருக்கு.. அவர் போய்  பட்ட பகல்ல பப்ளிக் ப்ளேஸ்ல உங்க தம்பி அடிக்கிற கூத்தையும் அந்த மாதிரி பொண்ணு முகத்தை எல்லாம் பார்க்கன்னுமா அதான் வேண்டாம் சொல்றேன் என்று மஞ்சுளா கூற வேதாசலத்திற்கு தேவா மேல் வெறுப்பு தான் அதிகரித்தது…  அங்கிருந்து விறு விறுவென வெளியே சென்றார்…

மஞ்சு தேவா உட்கார்ந்து அந்த  பொண்ணுகிட்ட பேசிட்டு இருக்கான் அவ்ளோ தான். அவங்க என்ன பேசுறாங்க யார் அந்த பொண்ணுன்னு தெரியாம உன் வாய்க்கு வந்த மாதிரி தப்பா பேசாதா என்று மீனாட்சி கடிந்து கொண்டார். அத்தை உங்க பையன் தேவா எப்படின்னு எல்லாருக்கும் தெரியும்.. அப்படி பட்டவர் கூட ஒரு பொண்ணு பேசுறானா அவ மட்டும் நல்ல பொண்ணாவா இருப்பா என்று மஞ்சு கூற மீனாட்சி இருக்கும் இடம் கருதி அமைதியாக தன் கணவன் பின்னே சென்றார். மஞ்சு தனது மொபைலை எடுத்து தேவாவை போட்டோ எடுத்து அதை  இந்துமதி அவள் கணவன் கார்த்திக். ராகவ், இனியா, சூர்யா என் அனைவருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியபடியே கீழே இறங்கி சென்றாள்…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now