இராவணனின் சீதை 💖

נכתב על ידי Anupriya_Arun08

40.1K 995 160

இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை... עוד

இராவணனின் சீதை 1 💖
இராவணனின் சீதை 2 💖
இராவணனின் சீதை 3 💖
இராவணனின் சீதை 4 💖
இராவணனின் சீதை 5 💖
இராவணனின் சீதை 6 💖
இராவணனின் சீதை 7 💖
இராவணனின் சீதை 8 💖
இராவணனின் சீதை 9 💖
இராவணனின் சீதை 10 💖
இராவணனின் சீதை 11 💖
இராவணனின் சீதை 12 💖
இராவணனின் சீதை 13 💖
இராவணனின் சீதை 14💖
இராவணனின் சீதை 15 💖
இராவணனின் சீதை 16💖
இராவணனின் சீதை 17 💖
இராவணனின் சீதை 18 💖
இராவணனின் சீதை 19 💖
இராவணனின் சீதை 20 💖
இராவணனின் சீதை 21 💖
இராவணனின் சீதை 22 💖
இராவணனின் சீதை 23 💖
இராவணனின் சீதை 24 💖
இராவணனின் சீதை 25 💖
இராவணனின் சீதை 26 💖
இராவணனின் சீதை 27 💖
இராவணனின் சீதை 28 💖
இராவணனின் சீதை 29
இராவணனின் சீதை 30💖
இராவணனின் சீதை 31 💖
இராவணனின் சீதை 32 💖
இராவணனின் சீதை 33💖
இராவணனின் சீதை 34 💖
இராவணனின் சீதை 35 💖
இராவணனின் சீதை 36 💖
இராவணனின் சீதை 38
இராவணனின் சீதை 39
இராவணனின் சீதை 40
இராவணனின் சீதை 41 💖

இராவணனின் சீதை 37 💖

898 25 7
נכתב על ידי Anupriya_Arun08

மருத்துவமனையில் இருந்து அன்று மாலையே மதியை டிஸ்டார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்... மருமகளை பத்திரமாக இருக்கும் படி பல அறிவுரைகளை அவளுக்கு கூறி அனுப்பினார் மீனாட்சி... பூரணியும் தன் பங்கு இருக்கு அறிவுரை கூறியே அனுப்பினாள்... இதே போல் இனிமேல் கோபமே படக்கூடாது அது குழந்தைக்கு ஆபத்து என்று அவளுக்கு சொல்லி புரிய வைத்தால் பூரணி...

விக்ரம் அவளுடனே யாஷ் வீட்டிற்கு வந்தான் ... அவனுக்கும் காயம் ஏற்பட்டிருந்தால் 10 நாட்கள் லீவ் கொடுத்து அனுப்பி இருந்தார் அவன் தந்தை... ஜாலியாக இந்த லீவை தன் மனைவியுடன் கழிக்கலாம் என்று வீட்டில் டேரா போட்டு விட்டான்... இவ்வளவு நாள் பார்த்துக்கொள்ளாத மகளை பார்த்துக் கொள்வதற்காக யாஷ் வீட்டிலேயே தங்கி இருந்தார் வேந்தன் ....

ஆனால் தலைக்கு மேல் வேலை இருக்க மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினார்கள் அனைவரும்... தம்பி தங்கைகளை பிரிய அவளுக்கு மனம் இல்லை... ஆனால் அவர்களுக்கு படிப்பு முக்கியம் என்று அரை மனதுடன் தன் குடும்பத்தினரை அனுப்பி வைத்தாள். இவ்வளவு நேரம் விக்ரமிற்கு அவளிடம் பேச தனிமை கிடைக்கவில்லை... உணவு சாப்பிடும் போதும் அவன் கையில் அடிபட்டு இருப்பதால் அவளே அவனுக்கு ஊட்டி விட்டாள்...

நெருக்கத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு முன் தன்னை முதல் முறையாக கை கால்கள் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்... மதிக்கு இவரு இவ்வளவு அடக்க ஒடுக்கமான பையன் இல்லையே என்ற ரீதியில் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் .... யுகமதி அறைக்கு வந்தவுடன் அங்கே அமைதியாக அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து காயம் ரொம்ப வலிக்குதா என்று கையை மெதுவாக வருடியவாறு கேட்க...

இல்லை என்று தலையசைத்தவன் சற்று கோவமாக தள்ளி அமர்ந்து கொண்டான்... அதில் அவள் மனம் வாட தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கோங்கோ... இனிமே என்னை விட்டு போங்கன்னு சொல்ல மாட்டேன்... நான் என்னதான் பண்றது சின்ன வயசுல இருந்தே என்னால தான் எல்லாம் தப்பு தப்பா நடக்குதுன்னு என்ன சுத்தி இருக்கிறவா சொல்லி இருக்காங்க... அதே போல எல்லாமே தப்பா தானே இதுவரைக்கும் நடந்திருக்கு ... நான் மட்டும் என்ன பண்றது என்று அழுகையுடன் மதி சொல்ல...

அவளை இதற்கு மேலும் கவலை அடைய விட கூடாது என்று முடிவெடுத்தவன் பாய்ந்து தன் இடது கையால் அவளை அணைத்துக் கொண்டான்... என் முன்னாடி அழுகாதடி மாமி என்று அவள் தலையை தடவி கொடுக்க .. நீங்க என்கிட்ட கோபப்படாதீங்கோ விக்ரம் எனக்கு ஏதோ பண்றது என்றால் ... அவளை தன்னை நோக்கி பார்க்க செய்தவன் அது என்ன விக்ரம்.. மதியம் இந்திரன்னு கூப்பிட்டே என்று அவன் குறும்பாக கேட்க ...

அது ஏதோ ஞாபகத்தில் சொல்லி இருப்பேன் என்றால் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டு... அது எப்படி டி மனசுல இருக்கிறது தான் வாயில வரும் என்று அவன் வம்பிழுத்து கொண்டு முத்தம் கொடுக்க வந்தான்.... அடிபட்டு இருக்கு கம்முனு போய் படுங்கோ... மாத்திரை போட்டுட்டீங்கல என்று கேட்க... ஆம் என்றான்... அவனை விட்டு அவள் தள்ளி படுக்க வலது கையில் தான் அடிபட்டு இருக்குடி... இடது கையும் நெஞ்சும் உனக்காக எப்போதுமே காத்திருக்கு என்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு தூங்கினான் ...

காலை யாஷ் மற்றும் விக்ரமிற்க்காக மதி மித்ராவுடன் சமைத்துக் கொண்டிருக்க எழுந்து வந்த விக்ரம் ஷோபாவில் அமர்ந்திருந்த தேவ்வுன் அமர்ந்து கொண்டான் ....இருவருக்கும் அவள் காப்பி எடுத்து வந்து கொடுக்க இருவரும் ஒரே கப்பில் கை வைத்தனர்... அது என்னோடது என்று யாஷ் பிடுங்க ...அது என்னோடது என்று விக்ரம் பிடுங்கினான்.. அதான் ரெண்டு இருக்குல தனித்தனியா எடுத்துக்கிட்டா என்னவாம் என்று மதிக்கூறியவுடன் ...

ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே மறுபடியும் மற்றொரு கப்பில் கை வைத்தனர்... தலையில் அடித்துக்கொண்டு இருவருக்கும் தன் கையாலே காப்பியை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றால்... அவள் சென்றவுடன் மாறி மாறி முறைத்துக் கொண்டனர் ... அதன் பிறகு வந்த நாட்களில் கூட இருவரும் ஒரு நாள் கூட சண்டையிடாமல் இருக்க முடியவில்லை... அவளுக்கு முன் இதுவும் நிகழாதது போல் காட்டிக் கொள்பவர்கள்... அவள் அந்த இடத்தை விட்டு நீங்கி விட்டாள் அவ்வளவுதான் வாய் சண்டை நீண்டு கொண்டே இருக்கும் ...

மாறி மாறி சண்டை போட்டு இரண்டு நாள் ஓடிவிட்டது ....மித்ரா யுகமதி இருவரும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்க யாஷ் ஹாலில் டிவி பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்... விக்ரம் அவன் அறையில் இருந்து இன்னும் எழவில்லை... ஜானு என்ன உன் புருஷன் இன்னும் வரலையா என்று கேட்க ...தூங்கிட்டு இருக்காரு என்றாள் மதி... சற்று நேரத்தில் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் மதி...

கைல அடி சரியாயிட்டா என்று யாஷ் கேட்க ... பரவால்ல காயம் ஆறிருக்குன்னு தான் சொன்னாரு தேவ்... அவர் மூஞ்சில வலி தெரிந்தால் தான் நமக்கு ஆச்சரியப்படுவதற்கு... கல்லை முழங்குன மாதிரியே இருக்காரு என்று சோகமாக கூற .... விக்ரம் மாடியில் இருந்து இறங்கி வந்தான்... என் மூஞ்ச பாத்தா உனக்கு அப்படியா டி மாமி இருக்கு .... ஊர்ல போய் கேட்டு பாரு எவ்ளோ அம்சமான சிரிச்ச மூஞ்சி என்று சொல்கிறார்கள் என்று அவளிடம் விக்ரம் கூற...

ஆமா இந்த இத்து போன முஞ்சிக்கு அழகன்னு மனசுல நினைப்பு என்று மனதிற்குள் யாஷ் புலம்பினான்... இன்னைக்கு எனக்கு லீவு தான்... ஏதாவது பிளான் இருக்கா ஜானு என்று கேட்டான் யாஷ்.... என்ன பிளான் நீங்க தான் ஏதாவது சொல்லணும் என்று இருவரிடமும் கூற .... அந்நேரம் யாஷிற்கு ஒரு போன் கால் வர எழுந்து சென்று விட்டான்...

மதி அருகில் இடித்து விட்டு அமர்ந்த விக்ரம் ஏன் டி இதோ போகுதே ஒரு பீசு இந்த மூஞ்சிக்கு உன் கிட்ட பாசமா பேசவும்... என்கிட்ட முறைச்சு சண்டை போட மட்டும் தான் தெரியுமா ... அவனுக்கு ஒரு பிள்ளையை நம்பி கட்டி வச்சிருக்கியே அது கிட்ட ரொமான்ஸ் பண்ணவே தெரியாதா என்று யாஷை பார்த்துக் கொண்டே யுகமதியிடம் சீரியஸ் ஆக விக்ரம் கேட்க... எல்லாரும் உங்கள மாதிரியே பொண்டாட்டி பின்னால சுத்திக்கிட்டு இருப்பாங்களா என்ன என்றால் சிரிப்பை அடக்கிக் கொண்டு....

புருஷன் பொண்டாட்டி பின்னாடி சுத்தமா ரோட்ல போறவ பின்னாடியா சுத்துறது... என்ன கேனத்தனமா பேசுற மாமி என்று அவள் கன்னத்தை கிள்ளிவன்... உங்க அம்மா சரி இல்லடா மகனே என்று அவள் வயிற்றை பார்த்து கூறினான்... பின்னர் இன்னைக்கு நம்ம வெளிய போறோம்ல அங்க போய் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க நான் ஒரு பிளான் போடுறேன் என்று கூற ...

அவனை நம்பாத பார்வை பார்த்தால் மதி... நீ ஏண்டி என்னை வில்லன் ரேஞ்சுக்கு பாக்குற என்று அவளிடம் கேட்டான்... உங்களை காமெடி பீஸா நீங்க காட்டுக்குறிங்க ஆனா உண்மையிலேயே நீங்க ஒரு வில்லன் தான் என்றால் மதி ...அவளை மெச்சிய படி பார்த்தவன்,
என் பொண்டாட்டி மட்டும்தான் என்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கறது... அது வந்து எப்படி டி சொல்லுறது என்று யோசித்தவன் ...

மாமி எப்ப பாத்தாலும் உன் கூடவே இந்த பீஸ் திரியுது... அந்த புள்ளையும் பாவம் இல்லையா என்று கேட்க ...அவங்க ரெண்டு பேரும் நமக்கு முன்னாடி தான் அப்படி இருக்காங்க உங்கள மாதிரி அப்பட்டமா லவ் பண்ண தெரியல.. ஆனா ரூமுக்குள்ள என்ன நடக்குதுன்னு நம்ப கேமரா வச்சா பார்க்க முடியும் என்று கேட்க.. பாரேன் உனக்கு கூட அறிவு இருக்கு ..அப்படி என்னத்த கண்டுபிடிச்ச என்று விக்ரம் கேலியாக கேட்க...

அமைதியா இருங்க என்று அவனிடம் மெதுவாக கூறியவள் யாஷ் போன் பேசிக்கொண்டு கிச்சனில் இருக்கும் தன் மனைவியை ரசித்துக் கொண்டிருப்பதை அவன் முகத்தை திருப்பி காட்டினால்... இந்த மூஞ்சிக்கு இப்படி சைட் அடிக்க கூட தெரியுமா என்று விக்ரம் கேட்க... உங்க மூஞ்சிக்கே வருது அவனுக்கு வராதா... அவன் பாக்க தான் அப்படி ஆனால் உங்களை விட அழகு கொஞ்சம் அதிகம் தான் என்று அவள் கூறியதும்...

அடியே வாயை கடிச்சிடுவேன்... போனா போகுது நம்ம பொண்டாட்டி அப்படின்னு பார்த்தா ஓவரா கலாய்க்கிற .. வர வர ரொம்ப வாய் பேசுற டி மாமி... அப்புறம் செயலில் இறங்கி விடுவேன் என்று அவன் கூறியதும் ...அவனைப் பார்த்து பயந்தவள் வாலை ஓட்ட நறிக்குறவன் என்று அங்கிருந்து எழுந்து சென்றாள் ...ஆத்தி இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்போம் நினைத்துக் கொண்டவன் வாயை மூடிக்கொண்டு கிளம்புவதற்காக சென்றான் ...

நால்வரும் முதலில் கிளம்பி சென்றது விக்ரம் உடைய வீட்டிற்கு தான்... வாடா மகனே ஏதோ புகுந்த வீட்டுக்கு போன பொண்ணு மாதிரி அப்பப்ப வந்துட்டு போற... நீ இந்த வீட்டு பையன் ஞாபகம் இருக்கட்டும் என்று மீனாட்சி கூற... அது ஞாபகம் இருக்கு மம்மி என்று அவரை அணைத்துக் கொண்டவன் பூரி என்று அவளையும் அணைத்து விட்டான்...

சாரதி தாரா இருவரும் சித்தப்பா என்று அவனிடம் செல்லம் கொஞ்சம் கொண்டிருந்தார்கள் ...சதாசிவம் அமைதியாக அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தார்... யோகேந்திரன் இவனுக்கு கையில் அடிபட்டதற்கு பதில் அடிபட்டு இருக்கலாம் என்று சத்தமாக கூற... உனக்கு ஏற்கனவே மண்டையில் அடிபட்டு தான் குழம்பி கிடக்கு.. இதுல என்ன வேற திட்றியா... உனக்கு வேலையே இல்லையா டா வீட்ல இருக்க என்று திட்ட...

இன்னைக்கு லீவுடா பரதேசி என்று திட்டி விட்டு மகன் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்... வந்ததிலிருந்து அனைவரிடமும் பேசியவன் சதாசிவத்தை திரும்பியும் பார்க்கவில்லை... யாஷ் மதி மற்றும் சதாசிவம் அவன் செயலை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்... மீனாட்சி மருமகளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க... தேவா எதுவும் பேசாமல் தந்தையை திரும்பிப் பார்த்தான்...

அவர் ஏதோ யோசனையில் இருப்பதை போல் தோன்ற நேராக அவரிடம் வந்தவன் அவர் மடியில் அமர்ந்து விட்டான்... இவனுக்கு பகுமானத்தை பாத்தியா டி என்று மித்ராவின் காதில் யாஷ் கூற... என்ன ஆச்சு டாடி என்று சதாசிவத்தின் மூஞ்சை பார்த்து கேட்டான் கேள்வியாக... உடம்ப பாத்துக்கோ தேவா என்றார் தோய்ந்த குரலில் ... யுகமதி இந்த வளர்ந்த குழந்தைக்கு அப்பா மடியில் உட்கார்ந்து அப்படின்னு பேச்சு என்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்...

ரொம்ப பயந்துட்டியா டாடி என்று கேட்க.. ஆமாண்டா என்று பெரிதாக மூச்சு விட்டவர் உன்னை அந்த நிலைமையில ஒரு பெத்தவனா பார்த்ததும் உயிரே போய்டுச்சு... உன் மேல ஒரு தூசி கூட படாம வளர்த்தேன் டா ... இப்படி அடிபட்டு வந்து நிக்கிறதை பார்த்ததும் மனசு ஒரு மாதிரியா ஆயிடுச்சு என்று அவன் அடிபட்ட கையை தடவி கொடுத்தார் ... அவர் சோகத்தை தாங்க முடியாதவன் சூழ்நிலையை இயல்பான மாற்ற ...

டாடி அவ்வளவு சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு நான் போக மாட்டேன் ... உன்னை இம்சை படுத்துவதற்காகவே பிறந்த பீசு நான் ... கண்டிப்பா உன் மண்டையில பேஸ்கட் பால் ஆடுவேன் என்று அவர் தலையை இடது கையால் தடவி கொடுக்க... அவரும் சிரித்துக் கொண்டு எருமை மாடு மடியில உட்கார்ந்துகிட்டு வக்கனையா பேசுற ... எழுந்து போடா என்றார் சிரித்துக் கொண்டே ...

பாரு மம்மி இந்த ஆள் என்னை திட்றாரு என்று மீனாட்சியிடம் கூற... தேவா உள்ள வா என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றார்.. யாஷ் விக்ரமின் தந்தை சிதாசிவத்தின் கையைப் பிடித்துக் கொண்டு நான் கூட உங்க பையன ஒரு முறை பலமா அடிச்சிட்டேன் அங்கிள்... அப்போ நீங்க எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பீங்க... மன்னிச்சிடுங்க அங்கிள் என்று யாஷ் கேட்க ...

பரவால்ல விடுப்பா எனக்கு இப்படி ஒரு தங்கமான மருமக இன்னொரு அன்பான பிள்ளை கிடைக்க அது தான் காரணம் என்று பெருந்தன்மையாக கூறியவர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டார்... பின்னால் நால்வரும் சேர்ந்து வீட்டில் கூறிவிட்டு வெளியே கிளம்பி வந்தனர் ... ஒரு ஷாப்பிங் மால் வந்ததும் இரண்டு இரண்டு பேராக பிரிந்து கொள்ளலாம் என்று விக்ரம் சொன்னதும்...

யாஷ் ஜானுவுடன் போகிறேன் என்று கூற அவன் தலையில் தட்டிய விக்ரம் எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பிரைவசி வேணும்... நீ உன் பொண்டாட்டி போடா பன்னி மூஞ்சி வாயா என்று அவனை பின்னாடியே பிடித்து தள்ளி மித்ராவின் மீது விழ செய்தவன் யுகமதியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்... இவனுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவில்லை... இவனுக்கு நம்ம வேற ஏதாவது பிளான் போடணும் என்று தீவிரமாக விக்ரம் யோசிக்க ..

உங்களை பார்த்தால் அவ்வளவு நல்லவர் மாதிரி தெரியல ... எதுக்காக இதெல்லாம் பண்றீங்க என்று குறுகுறுவேன அவனை பார்த்து மதி கேட்க.... அவளை ஒரு இடத்தில் அமர வைத்த விக்ரம் ... நீ முதலில் சொல்லு அன்னைக்கு என்னை விட்டு போறேன்னு சொன்னதுக்கு யாஷ் தானே காரணம் என்று சரியாக கேட்க... அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தால்...

இது எனக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறாயா? என்னதான் நீ அவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சி இருந்தாலும் ... அவங்களுக்குள்ள இன்னும் ஏதோ ஒரு உறுத்தல் இருக்கு... அவங்களுக்கு நடுவுல தான் நம்ம இருக்கோம் ... நம்ம மட்டும் நம்ம புருஷன் கூட சந்தோஷமா இருப்பதை பார்த்து மித்ரா வருத்த படக்கூடாது அதான உன்னுடைய எண்ணம் என்று அவள் மனதை அப்படியே படித்து அவள் மணவாளன் கூற...

அவனை பாய்ந்து வந்து கட்டிக் கொண்டவள் கண்ணீருடன் ஆம் என்றால்... இதற்குத் தாண்டி நான் ஒரு பிளான் வச்சிருக்கேன் நைட் வரைக்கும் வெயிட் பண்ணு அப்புறம் புரியும் என்று அவன் கூறியவுடன்.. தேவ் கோபப்படுற போறான் இந்திரன்... கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க என்று மதி கூறியவுடன்... அத்தானோட ஐடியாவை பாத்து நீ அசந்துருவ பாரு டி மாமி... நானும் என் பொண்டாட்டி கூட எந்த இம்சையும் இல்லாம சந்தோஷமா இருப்பேன் என்று சந்தோஷத்துடன் கூற....

அப்போ இதுல உங்க சுயநலமும் இருக்கு என்றால் அவனை முறைத்துக் கொண்டே... வரவர இவளுக்கு மூளை அதிகமாக வேலை செய்யுது டா விக்ரம் என்ற மனதில் நினைத்தவன் ... அப்படி எல்லாம் இல்லை செல்லக்குட்டி என் பொண்டாட்டி சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்று அவளை அணைத்துக் கொண்டான்... இங்கு மித்ரா யாஷீன் கையை பிடித்துக் கொண்டு மால் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தாள் ... அவளுக்கு பிடித்தது மித்ரா விரும்பி பார்த்தது எல்லாம் வாங்கி கொடுத்தான்...

இரண்டு மணி நேரத்திற்கு பின் இருவரும் சேர்ந்து ஜானு விக்ரம் அருகில் வந்து அமர்ந்தனர் ...அப்பொழுது ஒரு பெண் வேகமாக விக்ரமை நோக்கி ஓடிவந்து நீங்க தேவேந்திரன் ஏசிபி தானே என்று கேட்க.. ஆம் என்று தலை அசைத்தான் ... சார் நான் உங்களோட மிகப்பெரிய ஃபேன் ... உங்க ஃபோட்டோ பார்த்து லவ் பண்ணினேன் சார் .. அதை விட நேர்ல சமையா இருக்கிங்க..

உங்கள பார்த்ததுமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுல என்று சோகமாக அந்த பெண் கூற ... விக்ரம் சட்டென திரும்பி தன் மனைவியின் முகத்தை பார்த்தான் ... அவள் காளி உருவெடுத்து ஆட்டம் ஆட தயாராக இருக்க... ஆமா சிஸ்டர் என்றான் பதற்றத்துடன் வேகமாக... ஐயோ சிஸ்டர் எல்லாம் சொல்லாதீங்க என்று அவள் அழுவது போல் கூற...

ஏங்க நானே இப்பதான் என் வாழ்க்கையில ஒரு ஃப்ளோல போயிட்டு இருக்கேன் ..என் பொண்டாட்டிக்கு முன்னாடியே இப்படி சொல்றீங்களே என்று அவன் கேட்டதும்... யாஷ் விழுந்து விழுந்து சிரிக்க அந்த பெண்ணும் யாஷை திரும்பி பார்த்தாள் ...அவன் திருட்டு மூழி முழிக்கவும்... இது உன் வேலையாடா என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க... ஆம் என்ற தலையசைத்தான் ...

அந்த பெண் சாரி ப்ரோ அவர்தான் சொன்னாரு ... இது ஒரு ஃபன்தான் என்று ஓடிவிட்டாள் ... இருடி உனக்கு பெருசா ஆப்பு வைக்கிறேன் என்று யாஷை பார்த்து நினைத்த விக்ரம் என் பொண்டாட்டி இருக்கறதுனால உன்னை விடுறேன் என்று அவனை முறைத்துக் கொண்டே கூற... இல்லன்னா என்ன பண்ணுவீங்க என்று ஜானு அவனிடம் ஏகுற...

ஒன்னும் பண்ண மாட்டேன் டி என்று பதறி அவளிடம் பதில் கூறியவன்... டேபிளுக்கு கீழே யாஷின் காலை ஓங்கி மிதித்தான்... அம்மா என்று யாஷ் கத்த... அச்சோ என்ன ஆச்சுடா என்று பாவமாக விக்ரம் கேட்டு வைத்தான்... இடிச்சிகிட்டேன் என்று பல்லை கடித்துக் கொண்டு யாஷ் கூறியதும்... பார்த்திருக்க மாட்டியா என்று சிரித்துக் கொண்டே விக்ரம் கேட்டான்...

ஜானு அவனை திரும்பிப் பார்க்க செல்லக்குட்டி உனக்கு ஐஸ்கிரீமும் ஜூஸ் அத்தான் உனக்கு வாங்கி தரேன் என்று அவளுக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்து நால்வரும் இரவு வீடு வந்து சேர்ந்தனர்... மித்ரா எங்கெல்லாம் செல்கிறாலோ அங்கெல்லாம் யாஷின் பார்வை நிலைத்திருந்தது ... அதை விக்ரம் கவனித்துக் கொண்டிருக்க ... யாருக்கும் தெரியாமல் இருவர் குடிக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டான் விக்ரம்...

சோபாவில் அமர்ந்தவாரே இருவரும் தூங்கி விட ...அச்சோ என்ன ஆச்சு அவா ரெண்டு பேருக்கும் என்றும் மதி பயத்தில் அவர்களை எழுப்ப முயற்சித்தால்... எல்லாம் அய்யாவோட வேலைதான் என்று சட்டை காலரை தூக்கி விட்டவன் இருவரையும் தூக்கிக்கொண்டு தனது காரில் போட்டு விட்டு டிரைவரிடம் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினான் ...

இப்போ அவங்களை எங்க அனுப்பி வைக்கிறீங்க என்று தனது மேலிட்ட வயிறு பிடித்துக் கொண்டு வந்து மதி கேட்க... அவளை அலேக்காக தூக்கியவன் அவன் வீட்டுக்குள்ளே இருந்தா என் பொண்டாட்டி கிட்ட என்னால இருக்க முடியாது ... அதனால அவனை பேக் பண்ணிட்டேன்.. ஒரு வாரத்துக்கு அவன் தொல்லை இருக்காது என்று கூற...

யாஷ் சந்தோஷமா இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம் என்று யுகமதி கவலையாக சொல்ல... கண்டிப்பா சந்தோஷமா இருப்பான் டி ... அவன் சந்தோஷமா இருந்தா நீ சந்தோஷமா இருப்ப... நீ சந்தோஷமா இருந்தா நான் சந்தோஷமா இருப்பேன் என்று அவளை அணைத்துக் கொண்டான் ... அதிகாலை 5 மணிக்கு முழிப்பு தட்டிய யாஷ் எங்கோ சென்று கொண்டிருப்பது அறிந்து அதிர்ச்சியாக விழிதான் ...

பக்கத்தில் மித்ரா மயங்கிய நிலையில் இருக்க மித்ரா மித்ரா என்று கன்னத்தில் தட்டினான்... தங்களை யார் அழைத்துச் செல்வது என்று தெரியாமல் காரினை பார்க்க அது விக்ரம் உடைய கார் என்று அறிந்ததும்... அவனுக்கு உடனே அலைபேசியில் அழைத்தான்... ஏண்டா பிறவி சைக்கோ உனக்கு மூளைன்னு ஏதாவது ஒன்னு இருக்கா என்று அவன் புலம்ப ...

ஏண்டா காலங்காத்தாலே போன் பண்ணி கத்துறியே உனக்கு முதல்ல அறிவு இருக்கா என்றான் இவனும் விடாமல் ... இப்ப எங்களை எங்கடா அனுப்பி வைக்கிற என்று கேட்க... சொறி பிடிச்ச நாயே ஜானு மோனு-ன்னு என் பொண்டாட்டி பின்னால சுத்துற உனக்கு பொண்டாட்டி இருக்கால டா ... அவளுக்கும் உன் ஜானு போல சாதாரண பொண்ணு தானே... புருஷன் கூட இருக்கனும் என்று ஆசை இருக்காதா ... நான் பேபியை பாத்துக்கிறேன் நீ என் தங்கச்சியை பாரு டா என்று தன்மையாக கூறினான்...

யாஷும் அவன் கூறுவது உண்மை என்று அறிந்து ரொம்ப தேங்க்ஸ் டா ...மித்ராவை எங்கேயாவது கூட்டிட்டு போகணும்னு மனசுல ஆசை இருந்துச்சு ...ஆனா இந்த நிலைமைல ஜானுவ விட்டுட்டு போக மனசு இல்லை ...ஆனா நீ சொன்னது தான் என் புத்திக்கு உரைக்குது.. இப்ப எங்களை எங்க அனுப்பி வைக்கிற என்று அவனும் வழக்கத்திற்கு மாறாக அவனிடம் அமைதியாக பேச... ஹனிமூன் தான் டா லூசு...

எனக்கு பையன் பொறந்த அவளுக்கு கட்டி வைக்க ஒரு பொண்ணு வேணும்... நீ இப்படி சும்மாவே இருந்தா நான் எங்க போய் பொண்ணு பார்க்கிறது... நீதான் ஜானு ஜானு இவன் பின்னாடி சுத்திட்டு இருக்க... உன் பொண்டாட்டி பின்னாடி கொஞ்ச நாள் சுத்து ... தங்கச்சி மனசு புரிஞ்சு நடந்துக்கோ .... உனக்கு பொண்ணு பொறந்த எனக்கு கல்யாணம் பண்ணி உன் ஜானுவுக்கு நீ சம்பந்தி ஆகலாம் என்று அவன் தூக்கத்தில் உலற..

உனக்கு ஏன்டா நான் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று இவனும் கத்தினான் ... சாரி தூக்கத்துல உளறிட்டேன் என் பையனுக்கு கட்டி வைக்கலாம்... எனக்கு என் பொண்டாட்டியே போதும் என்று தூங்கும் மனைவியை பார்த்து கூறியவன்... இன்னும் உனக்கு என்னடா பேச்சு வேண்டி கிடைக்குது ... இனிமே ஒரு வாரத்துக்கு உன் போன் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று போனை ஆஃப் செய்துவிட்டு தூக்கி எறிந்தான் விக்ரம்...

இங்கு யாஷ் அவன் கூறியதை கேட்டவுடன் இவன் சொல்றதுல இப்படி ஒரு பாயிண்ட் இருக்கா என்று யோசித்தான்... கண்டிப்பா என் ஜானுவோட பையனுக்கு என் பொண்ணு தான் ஜோடி என்று மனதில் நினைத்தவன்... அவன் அவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்கிறது என்று கூறிக்கொண்டு மனைவியை அணைத்துக் கொண்டான்... அவள் கண் திறந்து பார்க்கும் நொடிக்காக காத்திருந்தான் மித்ராவின் யாஷ்...

--------------------------------------------
நண்பர்களே...
கதை எப்படி போகுது 😊❤️❤️❤️ இன்னும் ரெண்டு எபிசோட்-ல கதை முடிஞ்சிடும் உங்களுடைய பொன்னான கருத்துக்களை சொன்னால் என் மனசு கொஞ்சம் சந்தோஷப்படும் நிறைய கமெண்ட்ஸ் கொடுங்க❤️❤️❤️❤️❤️❤️ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா குழந்தையை மன்னித்து விடுங்கள் அடுத்த பதிவில் திருத்திக்கிறேன் 😁😁😁

המשך קריאה

You'll Also Like

72.3K 3.4K 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
28.9K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
104K 5.9K 28
'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இய...