ஏதாவது சொல்லனுமா? இல்ல என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?" என சந்தேகமாக அவளைப் பார்த்து கேட்டான்.

"அதெல்லாம் இல்லை. எனக்கு கல்யாணம் ஆய்ருச்சுல இன்னுமும் சின்ன இல்லேல. அதான் அம்மா என்கிட்ட ஆனந்தி இன்னும் விளையாட்டு பிள்ளயாவே இல்லாம குடும்ப பொண்ணா இரு.

இனிமே உன் குடும்பத்தை நீ தான் பார்த்துக்கனும். நெனச்ச நேரத்துக்கு எழுந்திருக்கக் கூடாது.

உன் புருசனுக்கு என்ன தேவையோ  நீ தான் பார்த்து பார்த்து எல்லாத்தையும் பண்ணி தரணும் அப்படின்னு அம்மா சொன்னாங்க.

அதான் நானும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். என கூற அவளை நெருங்கியவன், அவள் கண்களைப் பார்த்தான்.

மெதுவாக தன் கைகளால் அவளுடைய கன்னத்தை பற்றி,

" எனக்காக நீ எதுவும் பண்ண வேணாம், ஆனந்தி. நீ போய் தூங்கு. நீ எப்பவும் போல இரு. அதுவே எனக்கு போதும். போ ரெஸ்ட் எடு. "

என வெளியே கூறிக் கொண்டாலும் மனதிற்குள்ளோ, 'ஆனந்திமா, நீ என்கிட்ட பொய் சொல்றேன்னு புரியுது. ஆனா நீ நினைப்பது மட்டும் என்னால முடியாது ஆனந்தமா.' என மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஆனந்தியிடம்,

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளிய போயிட்டு வரேன். நீ போ." என அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

அரவிந்த் வெளியேறியதும் சமையல் அறைக்குள் நுழைந்த ஆனந்தி அரவிந்திற்கு பூரி உருளைக்கிழங்கு மசாலா செய்து முடித்து அரவிந்த் வருகைக்காக காத்திருந்தாள்.

நேரம் சென்று கொண்டிருக்க அரவிந்த் வருவதற்கான எந்த தடயமும் இல்லாமல் இருக்க, அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

அதை எடுத்த அரவிந்த் ஆனந்தியை பேசவிடாது,

" நான் ஒரு முக்கியமான வேலையில இருக்கேன். என்ன டிஸ்டர்ப் பண்ணாத ஆனந்திமா. என்னால இப்போ வர முடியாது. நான் மதியம் வர்றேன்." என கூறியவன் ஆனந்தி பதில் கூறும்  அழைப்பை அணைத்து இருந்தான்.

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now