💖41💖

4.8K 224 47
                                    

'எவ்வளவு தைரியம் இந்த ஆரு மாமாக்கு. இரு. நான் உன்னை வச்சிக்கிறேன்.' என்று தலையணையையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.

நேரே அரவிந்தின் அறையை அடைந்தவள் வேகமாக அறை கதவை தட்டினாள்.

பதறியடித்துக்கொண்டு தன் வேலைகளை நிறுத்திவிட்ட அரவிந்த் அறைக் கதவை யாரோ வேகமாக தட்ட ஆனந்தியாக இருக்குமென வேகமாக எழுந்தவன் அறையின் கதவை திறக்க கோபமே உருவாக தலையணையுடன் நின்றிருந்த ஆனந்தியை கேள்வியாக பார்த்தான்.

அவன் பார்வையை பார்த்து அவனை முறைத்து விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

" என் மேல கோபமா இருக்கீங்களா?" உள் சென்ற குரலில் கேட்டாள்.

"உன் மேல நான் எப்படி கோபமா இருப்பேன், ஆனந்திமா. இன்னும் சொல்லப் போனால் நீ என்னை ஏத்துக்கிட்டதுல நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்."

" இல்ல நீங்க பொய் சொல்றீங்க." என குனிந்து கொண்டாள்.

அவள் தாடையை தன் விரல் கொண்டு நிமிர்த்தியவன், "நான் எதுக்குடா பொய் சொல்லணும்?"

"என்னை உங்க மனைவியா இன்னும் ஏத்துக்க முடியலயா?"

"யார் சொன்னா நீதான் என்னோட மனைவி. நீ பிறக்குறதுக்கு முன்னாடி இருந்தே. அது நான் சாகுற வரைக்கும் மாறாது."

"அப்ப எதுக்கு என்னை மேல கெஸ்ட் ரூம்லயே தூங்க விட்டுட்டீங்க. இப்ப நானும் உங்களை ஏத்துக்குட்டேன்ல. உங்க வெய்ப் தானே அப்ப நான் உங்க கூட தானே தூங்கணும். முன்னாடி எனக்கு எதுவும் தெரியாது. அதனால என்னை உங்க ரூம்குள்ள விடல.

இப்பதான் எனக்கு எல்லாமே தெரியுமே. இந்த ரூமையும் நான் பாத்துட்டேன். இப்பவும் நீங்க என்னை மேலேயே தூங்க சொன்னா எப்படி?" என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல அரவிந்த்க்கு பாவமாக தெரிந்தது.

"அதெல்லாம் சரி. இந்த தலைகாணி எதுக்கு?"

"தலைகாணி இல்லன்னு சாக்கு சொல்லி நீங்க மேலேயே தூங்க சொல்லிட்டா. அதனால தான் சேப்டியா இருக்கட்டும்னு எடுத்துட்டு வந்துட்டேன்." என உதட்டை சுழித்து கூற அவளை கண்கொட்டாமல் பார்த்தவன், சிறிது நகர்ந்து ஆனந்தி உள்ளே வருவதற்கு வழி விட்டான்.

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now