💖53💖

2.8K 45 32
                                    

தன்னை மறந்திருக்கும் என எண்ணி இருந்த கிராமம் அரவிந்துக்கு கொடுத்த வரவேற்பில் கண்கலங்கினான்.

வருடங்கள் பல கடந்தும் தன் தாத்தா மற்றும் தந்தை செய்த உதவிகள் அவனை அவர்களை மறக்க விடச் செய்யவில்லை என உணர்ந்தான், அரவிந்த்.

"ஏய்யா.... ராசா... எப்படியா இருக்க? நீ காணோம்னு மனசே வெந்து போச்சுய்யா. இப்படி ராஜாவாட்டம் உன்னை பார்த்து தான் நிம்மதியே வருது. எப்படி வாழ்ந்த குடும்பம். இப்ப குடும்பமே இல்லாம செதஞ்சு போயிருச்சு. இப்படியா போகணும்." என ஒரு வயதான பாட்டி புலம்பி தள்ளினார்.

"எது எப்படி போனா என்ன அப்பத்தா. அதான் நீங்க எல்லாம் இருக்கீங்கள. உங்களை விட எங்களுக்கு வேற என்ன வேணும். குடும்பம் இருந்திருந்தா அவங்க பாசம் மட்டும் தான் தெரிஞ்சுருக்கும். இப்போ அவங்க இல்லாததாலவோ என்னவோ மொத்த கிராமத்தோட பாசமும் எங்களுக்கு கிடைச்சிருக்கு."

"உனக்கு உன் அப்பானாட்டம் , தாத்தன் பாட்டன், பூட்டனாட்டாம் ரொம்ப பெரிய மனுசுயா. உன்ன மாதிரியே உன சந்ததியும் வரணும்யா." என மற்றொரு வயதான பெண்மணி கூறினாள்.

அரவிந்தின் கண்கள் ஆனந்தியை ஏறிட, ஆனந்தியோ வேற்று கிரகத்துக்குள் குதித்த ஏலியன் போல கிராம மக்களின் பார்வையில் ஒன்றும் தெரியாது, புரியாது விழித்துக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்த அரவிந்துக்கு சிரிப்பு வர முயன்று அடக்கியவன் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை ஏறிட்டான்.

"இங்க பாரு இந்த பிள்ளைய அப்படியே நம்ம லட்சுமியை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு."

" ஆமா அக்கா இதுதான் மகாலட்சுமி சொன்னா கூட நம்பிடலாம் போல. அப்படியே இருக்கு." என ஒரு புறம் ஆனந்தி பற்றிய பேச்சு ஓடியது.

"எப்படியோ பிறக்குறதுக்கு முன்னாடியே எனக்கு பொண்டாட்டி பிறக்க போறேன்னு ஏலம் விட்டவன் இன்னைக்கு நெசத்துக்குமே பொண்டாட்டியாக்கிட்டானே."

"பின்ன வாக்கு தவறாத பரம்பரையாக்கும் அவன் பரம்பரை.  சொன்ன சொல்ல காப்பாத்துறவங்கய்யா. " என ஒருபுறம் கூற,

நீயே என் ஜீவனடிحيث تعيش القصص. اكتشف الآن