💖52💖

884 37 5
                                    

"மாமா என்ன யோசிக்கிறீங்க?"

"ஒன்னும் இல்ல ஆனந்திமா. மணி பத்தி தான் நினைச்சுட்டு இருந்தேன்."

"அதான் இனி எந்த பிரச்சனையும் இல்லன்னு ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களே. என்னால அவனுக்கு இப்படி ஆனதால குற்ற உணர்வா இருக்கா? சாரி மாமா."

"ச்சே ச்சே.. அப்படி எல்லாம் இல்ல. உனக்கு ஒரு ஆபத்துன்னு சொல்லும்போது அவன் அப்படி வராம இருந்தா தான் ஆச்சரியம்."

"ஏன் அந்த பயபுள்ளைக்கு என் மேல அம்புட்டு பிரியமா?"

"ரொம்ப பிரியம். நான் ஜெயில்ல இருந்து வெளியே வரும்போது உன்னை பாக்கணும்னு நினைப்பேன். ஆனா என்னால முடியாது. அடிக்கடி உன் ஞாபகம் வரும். அப்படி ஞாபகம் வரும்போதெல்லாம் உன்னை யாருக்கும் தெரியாம மறைஞ்சிருந்து பார்த்துட்டு போயிருவேன்.

அத ஒருநாள் மணி கவனிச்சு கேட்டான். அவன் கிட்ட ஏற்கனவே உன்னை பத்தி நிறைய சொல்லிருந்தேன். ஆனா அப்பவும் உன்னை காதலிச்ச விஷயத்தை மட்டும் சொல்லல. அறியா வயசு காதல்னு மட்டும்தான் சொல்லி இருந்தேன்.

எனக்கு ஒரு பயம் ஒரு சின்ன பொண்ணை காதலிக்கிறேன்னு தப்பா நெனச்சருவானோன்னு. அதுலயும் ஜெயிலுக்கு போயிட்டு வந்துருக்கேன்னும் இருக்கும். அதான் சொல்லல. என் கழுத்துல இருந்த தாலியை பார்த்து கேட்டபோது கூட என் அத்தை ஞாபகமா வச்சிருக்கேன்னு சொல்லி தான் சமாளிச்சேன்.

ஒருநாள் உன்னை பார்க்க வரும்போது அவன் பாத்துட்டான். அப்ப கூட அத்தை பொண்ணுங்குற பாசத்துல தான் பார்க்க வந்தேன்னு சொன்னேன். நம்பவே இல்ல. அப்புறமா வேற வழி இல்லாம அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.

அவன் உன்கிட்ட பேச சொன்னான். நீ சின்ன பொண்ணு என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன். நீங்க பேசாட்டி என்ன நான் போய் பேசுறேன்னு சொல்லி உன்னை பாக்க வந்தான்.

நான் எவ்வளவு தடுத்தும் முடியல. ஸ்கூல் முடிச்சு வரும்போது உன்னை பார்த்து பேசணும்னு ரோடு கிராஸ் பண்ணுனான். அப்படி கிராஸ் பண்ணும்போது ஒரு வண்டி அவனை மோத பார்த்துச்சு. அப்போ நீ தான் அவன காப்பாத்துன. அது மட்டும் இல்லாம அவன முறைச்சிக்கிட்டே,

நீயே என் ஜீவனடிOpowieści tętniące życiem. Odkryj je teraz