❤ 57 ❤

4K 187 86
                                    

உன் கன்னத்தில்
ரோஜாவின் நிறம்..
அதை கண்டதும்
என்னுள் வானவில்லின்
வண்ணங்கள்..
இது எவ்வகை மாயமோ..❤

சேற்றுக்குழியில் அமிழ்ந்து கொஞ்சம் அதில் இருந்த தண்ணீரையும் குடித்து எழுந்து அமர்ந்தாள் நிலா. அவள் விழுந்ததுமே சிரிக்க தொடங்கி விட்ட மதன் மீண்டும் அவளை திரும்பி பார்த்து பார்த்து சிரித்தான். நிலாவிற்கோ கோபம் ஒரு பக்கம் இவன் முன்னால் விழுந்துட்டோமே என்ற அவமானம் ஒரு பக்கம் என கொதித்துக்கொண்டிருந்தவள் அதே சேற்றை கையில் அள்ளிக்கொண்டு மதனை நெருங்க சரியான நேரம் அவள் கைகளிரண்டையும் பிடித்து தன்னிலிருந்து தூரமாய் நிறுத்தினான்.

"என்ன நிலா பேபி செமயா கோபமா இருக்கீங்களோ.. இந்த கோபத்த பார்க்குறப்போ.." என்று சேற்றில் நனைந்திருந்த அவள் கன்னத்தை வருடி சேற்றை துடைக்க.. பட்டென அவன் கையை தட்டி விட்டாள் நிலா.

"ஹ்ம் வேணா வேணா..இருக்க கோபத்துல இதையும் சொன்ன இன்னும் உனக்கு பிபி ஏறிடும்..வாங்க மேடம் போகலாம்.." அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் மதன்.

அந்நேரம் ஹாலில் அமர்ந்திருந்த சாரதாவிடம்
"என்ன சாரதா ஏதோ முக்கியமா பேசனும் சொல்லி நைட் கால் பன்னி வாரதா சொல்லியிருந்தீங்க.." வந்ததிலிருந்து அமைதியாய் இருந்தவருக்கு நினைவு படுத்தினார் சாவித்ரி.

"எல்லாம் ஒரு நல்ல விஷயமாக தான்.." அவர் கூறிவிட்டு திரும்ப அதே நேரம் அங்கு வந்து கொண்டிருந்த சதீஷ்..
"ஆன்ட்டி நிலாவோட இந்த அழகான தரிசனத்துக்காக தான் இவ்வளோ காலைல வந்தீங்க ரைட்டா.."என அவன் கூறவும் தான் அவன் பார்வையை தொடர்ந்து அனைவரது பார்வையும் அங்கு வந்துகொண்டிருந்த நிலா பக்கமாய் திரும்பியது.

"நிலா.." சாவித்ரி புரியாது அவளை பார்க்க..

அவளோ அங்கு இன்னும் வாய் மூடி சிரித்துக்கொண்டிருந்த மதனை தான் கண்களால் எரித்துக்கொண்டிருந்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Waar verhalen tot leven komen. Ontdek het nu