❤ 38 ❤

5.4K 239 99
                                    

என் பேரை
உன் பேரினில்
சேர்க்க ஆசை
வந்ததே
உன் தோளில்
எந்தன் தோள்
வந்து சாய
நேரம் வந்ததே..

பரபரப்பாய் அந்த குடிசையினுள் நுழைந்தாள் ராஜம்மாள்..

வாசலில் இருந்த ஒருவனோ.."அக்கா என்னக்கா இம்புட்டு லேட்டு.. ஐயா செம்ம கோபத்துல இருக்காரு.. கடைசி நேரம் பார்த்து சிறுக்கிய தப்பிக்க விட்டுட்ட..சரி இங்க தான வந்திருக்கா வேலய முடிச்சிட்டு உன்ன மன்னிக்கலாம் இருந்தாரு. ஆனா பாரு எல்லா கை மீறிட்டு.. இப்போ நீ லேட்டா லேற வந்திருக்க.. போ போ சீக்கிரமா." அவளை விரட்டினான்.

தன் பெரிய உடம்பை தூக்கிக்கொண்டு ஆடி அசைந்து கஷ்டப்பட்டு இவள் உள்ளே சென்றாள்.

அங்கு ஒரு இருட்டறையில் கொஞ்சமாய் ஒளி கசிந்து கொண்டிருக்க அதில் வரிவடிவமாய் தெரிந்தது கதிரையில் அமர்ந்து கண்களை மறைத்து கைகளை வைத்துக்கொண்டிருந்த வேலுவின் உருவம்.

அறையை பார்த்ததுமே கலக்கியது ராஜம்மாளிற்கு.

"சார்ர்.." அழைக்க பதிலோ இல்லை..

மீண்டும் அழைக்கலாமா என எண்ணி வாய் திறக்கப்போகவும் கண்கள் மேல் வைத்திருந்த கையை எடுத்தவன் அதே கையால் முன்னால் வருமாறு சைகை காட்டினான்.

முன்னால் வந்து நின்றவள் தலைகுனிந்தவாறே நிற்க..அமைதியாய் அவளைப்பார்த்த வேலு..என்ன என்றான் சைகையால்..

"சார்ர்.." அவள் ஆரம்பிக்கவும் "வாயை மூடு காரணம் சொல்லாத எதுவும்.. உன்ன எவ்வளோ பாராட்டிட்டு இருந்தன்.. ப்ளான் போட்டதே அந்த பையல ஜெய்க்க இதுல நீ அவன்கிட்டே அவள விட்டிருக்க.." கோபத்தை அடக்க வழி தெரியாது அங்கிருந்த மேசையில ஓங்கி அடித்தான் வேலு.

"இப்ப நீ ஏது பன்னுவ எனக்கு தெரியாது. தாலி கட்டிட்டா மட்டும் அவன் பொஞ்சாதி ஆகிட முடியுமா.. முடியாதில்ல.. சாரு புள்ளய நீ அவன கொன்னுட்டு சரி தூக்கிட்டு வார.. ஒன்னுக்கும் பயப்படாத எல்லாம் நான் பார்த்துக்குறன்..இந்த தடவ நீ தவறின நீ இருக்க மாட்ட.." அவன் அருகில் வந்து கூற பயத்தில் நா உலர.."இல்ல சார்ரு கண்டிப்பா அந்த புள்ளய தூக்கிட்டு வந்துர்ரன்.." என்றாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now