❤ 53 ❤

4.7K 229 81
                                    

எனை பார்த்து
மறையும் நிலவு
கலையாத நீ என் கனவு
விழிமூடி தூங்கும்
முன்னே வலி சேருதே..

சக்தியின் கையில் இருந்த தாளைப்பார்த்தவள்.."சக்தி அது.." என தொடங்க..போதும் என கையால் அவளை நிறுத்தியவன் அதனை தூர எறிந்து விட்டு வந்து படுத்துக்கொண்டான்.

தயங்கித்தயங்கி சக்தியின் தோள் பற்றி சாரு.."சக்தி..." என்க..

"சாருமதி எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம் ப்ளீஸ் தூக்கம் வருது.." சாருமதி என்ற அழைப்பில் சுருக்கென உள்ளே ஏதோ வலி தோன்ற பேசாமல் இவளும் மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

காலைப்பொழுது அழகாய் விடிய அறைக்குள் இருந்த இரு இதயங்களும் வெவ்வேறாய் துடித்துக்கொண்டிருந்தன.

காலேஜ் இன்றோடு பத்து நாட்கள் விடுமுறை அளிப்பதாக இருக்க இன்று செல்ல மனமின்றி வழமையான நேரத்திற்கே எழுந்து கொண்ட சாரு குளித்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள். இது பேச வேண்டிய நேரம் என உணர்ந்து கொண்ட சக்தியும் அவளை விட்டு தூரமாய் வந்து அமர்ந்தான்.

"சக்தி.."
சாரு மெதுவாய் ஆரம்பிக்க..

"ஹ்ம் சாருமதி இங்க பாரு.. நீ சின்ன குழந்தை இல்ல உனக்கு இப்போ எது உனக்கு வேணும் வேணாம் என்றது நல்லா புரியும் கண்டிப்பா.. உன் விருப்பத்துல இந்த கல்யாணம் நடக்கல.. அதுக்கு பர்ஸ்ட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறன்.." முதல் தடவையாய் தன்னிடம் மன்னிப்பு கேட்டவனை நம்ப முடியாதவளாய் பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு. தன்னெதிரே இருந்த ஜன்னலை வெறித்துக்கொண்டே தன் பேச்சை தொடர்ந்தான் சக்தி.

" நான் தாலி கட்டிட்டன் உனக்கு என்மேல தான் காதல் ஹ்ம் ஏதோ வரனும் என்று நான் எதிர்பார்த்தது தப்பு...கதிர உனக்கு பிடிச்சிருக்குல்ல..நான் கதிர் பற்றி எல்லாம் கேட்டுட்டேன். உனக்கு ரொம்பவே ஏற்றவர் தான்...என்ன போல இல்ல கோபம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது அவருக்கு..சோ.." அவனையறியாதே கண்கள் கண்ணீரை சுரக்க..கண்களை மூடித்திறந்து கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு தொடர்ந்தான்..

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now