❤ 3 ❤

7K 223 198
                                    

தினம் கடந்து
சென்றிடும் நிலவும்
ஓர் கணம் நின்று
எனை பார்த்திட
கண்டேன்..
என் மாயவள்
அவளின் வருகையை
அறிவித்திடத்தானோ

சாருமதி அவள் குடும்பத்திற்கு ஒரே மகள். அப்பா சாதாரண விவசாயி, அம்மா அவளுக்குத்தெரிந்த அலங்காரப்பொருட்கள், பின்னல்கள், மண் பொருட்கள் என கைவேலைப்பாடுகளை தானே தயாரித்து வீட்டிலே சிறிய கடை போட்டு விற்பனை செய்வாள்.

இருவருக்கும் மகள் என்றால் உயிர், அவளுக்கு தேவையானதைப்பாரத்து பார்த்து செய்வார்கள். ஆனால் அவளது ஒரே ஆசை தான் நிராசையாய்ப்போனது. அவளுக்கு அந்த குட்டி கிராமத்திலிருந்து வெளியே போய்ப்பார்க்க வேண்டும் என்று ஓர் ஆசை.
ஆனால் என்ன செய்வது அந்த கிராம மக்களுக்கு அந்த கிராமம் தான் உலகம் ஊர் பெரிய ஐய்யா வைப்பது தான் சட்டம். அவர்களது மூதாதையர்கள் வெளியேறக்காட்டிய தயக்கம் பிற்காலத்தில் ஓர் கட்டுப்பாடாக உருப்பெற்றது கிராமத்தினுள். பல தலைமுறைகள் வெளியுலகைக் காணாதே மடிந்து போனது.

சாருவின் பெற்றோர்களுக்கு மற்றைய அந்த கிராமத்து பெற்றவர்கள் போல் பெண்பிள்ளை என்றால் கட்டுப்பாடு என்ற கோட்பாடெல்லாம் கிடையாது. ஆனாலும் சாருவின் ஆசையை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை காரணம் கிராம கட்டுப்பாட்டை மீற துணிவு வரவில்லை. ஆண்களே இன்னும் கிராமத்தை விட்டு வெளியேறாது இருக்க ஒரு பெண் பிள்ளையை வெளியே அனுப்பும் அளவு அந்த கிராமம் எப்போது முன்னேறுமோ அவர்களுக்குப் புரியவில்லை.

சாருமதி சாதாரண பெண்களிலும் பார்க்க சற்று உயரம் குறைவாக இருந்தாலும் அவளுக்கு அதுவே சுட்டியாக மேலும் அழகை சேர்த்தது. இடையையும் தாண்டிய நீண்ட கூந்தல் அடர்த்தியாக பின்னலிட்டு அவள் நடையை மெருகூட்ட சந்தனத்தை குழைந்து அதில் கொஞ்சமாய் குங்குமம் இட்டால் தோன்றிடும் நிறம் அவள் நிறத்திற்கு ஒப்பாக..பார்த்து பார்த்து வடித்த சிற்பியின் கைவண்ணத்தில் மிளிர்ந்திடும் சிலை போன்ற அழகில் பார்ப்பவர்களை மீண்டும் பார்த்திட தூண்டும் அளவு இருந்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now