❤ 32 ❤

5K 268 166
                                    

பெண்ணே உன்
வாய்மொழிகள்
நான் கொண்ட
வேதங்களா..
கண்ணே உன்
ஞாபகங்கள்
நான் கொண்ட
சாபங்களா...

எழுந்து சென்று எதாவது பேசி அழுது கொண்டிருந்தவரை சமாதானம் செய்ய வேண்டுமே என வினோத் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் அது அவனால் முடியவில்லை. ரம்யா நன்றாக இருக்கிறாள் என முழுதாக சந்தோஷம் கொள்ள முடியவில்லை காரணம் அவர் கூறியதை வைத்து பார்த்தால் அவள் இங்கிருந்து சென்று இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. எங்கிருக்கிறாள் என தெரியவில்லை அவர்களுக்குமே. ஆனால் கண்டிப்பா நினைவு வரும் என்றது மட்டும் ஆறுதலாக இருந்தது. நினைவு வந்தாள் கண்டிப்பாக அவனை தேடி வருவாள் அது நிச்சயம் ஆனால் எவ்வளவு நாள் போகும்.. ஒரு வாரம்..ஒரு மாதம்.. மூன்று.. ஆறு.. ஒரு வருடம்.. விடையற்ற கேள்வி தான்.

ரம்யாவை அன்று அழைத்துச் சென்றவர்கள் கிடைத்தால் கேட்க வேண்டும் என நினைத்த அத்தனை கேள்விகளும் இன்று மௌனமாய் அவனுள் புதைந்து கொண்டது. சாரதாவின் அழுகையே அவர் ரம்யா மேல் கொண்ட பாசத்தையும் அவர்கள் அவளை எப்படி பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதையும் சொல்லாமல் சொன்னது. அன்று யாரும் அறியாமல் அழைத்து சென்றது தப்பு தான் இருந்தாலும் அன்பு சில வேளைகளில் சுயநலம் தானே. விடைபெற்றுக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த சுவரில் இருந்த அவளது படத்தை கண்களில் நிறைத்துக்கொண்டு வெளியேறினான் வினோத்.

கேட் வரை வந்தவனை தடுத்தது மதனின் அழைப்பு..

"ஒரு நிமிஷம்.. மிஸ்டர்.." அவன் இழுக்க..

"வினோத்.." என்றான் சிறு புன்னகையோடு.

"வினோத்.. இருந்தாலும் நீங்க ரொம்ப லக்கி.." என்றான் மற்றையவன்.

என்ன..காதல் சொல்லி கணங்கள் சில கடந்தே அது அறியாமலே வாடிட.. இன்று அவள் எங்கிருக்கிறாள் என்பதை கூட அறியாத அவன்.. அவள் முகம் காணாமல் தவிக்கும் அவன் மனம்.. இதை எல்லாம் அறிந்தும் அவன் எந்த விதத்தில் அதிஷ்டம் என்கிறான்.. என்று அவனையறியாதே ஒரு வருத்தமான புன்னகையோடு.. "என்ன" என்றான் வினோத்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Unde poveștirile trăiesc. Descoperă acum