❤என்றுமில்லா
வேகம் என்
துடிப்பில்..
கூர்ந்து கேட்டிட
உன் பெயர்
சொல்லிட
கேட்டேன் என்
இதயம்..❤"கங்க்ராட்ஸ் மிஸ்டர் என்ட் மிஸஸ் சக்தி.." தனியாக ஓர் குரலோடு கைதட்டல் ஓசையும் ஒலிக்க இருவரும் அத்திசையில் பார்க்க முன்னால் வந்து நினறவளைப்பார்த்து "தீக்ஷா.." என முணுமுணுத்தன சக்தியின் உதடுகள்.
"சார் அது எப்படி உங்க பெயர் மட்டும் சொல்லலாம் அவங்க..நானும் கூடவே தான வந்தன். கூடவே தான இருக்கன் இவ்வளோ நேரம்.." எம்பி நின்று சக்தியின் காதில் முணுமுணுத்தாள் சாரு.
இப்ப இது ரொம்ப அவசியம்..என்ற பார்வையை மட்டும் அவளிடம் வீசி விட்டு தன் பார்வையை தீக்ஷா பக்கம் திருப்பியவன் அவள் கூறியதை மறுக்க போகவும் அவளே தொடர்ந்து பேசினாள்.
"என்ன சக்தி சொல்லாம மேரேஜ் பன்னிகிட்டிங்க..அதுவும் என்ன மறக்கலாமா சக்தி சொல்லுங்க" அவனை ஆழமாக பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
"எனிவே இந்த டேபிள் நாங்க 'best couple of the day' ற்கு ரிசேவ் செய்திருந்தம்...என்ட் நவ் யு ஹவ் காட் இட்..ப்ளீஸ் கம் டு தி ஸ்டேஜ் மிஸ்டர் என்ட் மிஸஸ் சக்தி.."
கைதட்டல்கள் மீண்டும் ஒலிக்க ஒரு கணம் சிந்தித்தவன் சாருவை பார்க்க அவன் நினைத்தது போலவே அவள் எதுவும் புரியாது விழித்துக்கொண்டு தான் இருந்தாள்.
திரும்பி தீக்ஷாவை பார்க்க அவள் கண்களில் தெரிந்த தோல்வியின் வலியும் கோபமும் சக்தியை சொல்ல முடியாத சந்தோஷத்தில் ஆழ்த்தியது. வெற்றிப்புன்னகை மிளிர சாருவின் பக்கம் திரும்பியவன் அவள் வலது கையை அழகாய் பற்றினான் ஆனால் அவளது கவனம் எங்கோ இருக்கவும் ஒரு முறை சக்தி சாருவின் கையை மென்மையாய் அழுத்த குழப்பத்தில் இருந்து விடுபட்டவள் சக்தியின் புறம் திரும்பினாள். இருவரும் கண்ணோடு கண் நோக்க அவ்வழகிய தருணம் அழகாய் படம் பிடிக்கப்பட்டது.
YOU ARE READING
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....