❤ 41 ❤

5.4K 243 172
                                    

கண்திறந்தும் கலையாத
கனவென..
கனவிலும் அகலாத
நினைவென..
மாயவள் உன்னாலே
மாயமடி எங்கும்..

நாளை மாலை ரிசப்ஷன் என்றிருக்க சக்தி வீட்டு சொந்தமும் சாரு ஊர் சொந்தமும் இன்று மாலையே ஹாலிற்கு சென்று வேலைகளை முடிக்கலாம் என்று இருந்தனர். ஹால் இரண்டு தளம் கொண்டிருந்தது கீழ்தளம் ரிசப்ஷன் ஏற்பாடுகள் நடக்க மேல் தளத்தில் அனைவரும் தங்குவதற்கான அறைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விஷயங்களில் குடும்பத்தினர் கவனமாய் இருக்க ராஜம்மாள் தன் குறியில் கருத்தாய் இருந்தாள். தனக்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தவளுக்கு சாரு மற்றும் சக்தி கண்களில் இருந்து தப்பிப்பதும் முதலாய் இருந்தது.

மாலை நேரம் நெருங்க அனைவரும் தயாராகி இருந்தனர் ஆனால் சக்தியும் சாருவும் தான் வந்தபாடில்லை. வினோவை நெருங்கிய சாவித்ரி..

"ஏன்பா எங்க இன்னும் சக்திய காணோம். எல்லாரையும் காத்திருக்க வைக்க கூடாது இல்லையா.. "

திருதிரு என விழித்தவன் எப்படி சொல்வது என சிந்தித்து விட்டு.."அத்தை நீங்க எல்லாம் முதல்ல போங்க சக்தியையும் சாருவையும் நான்
கார்ல அழைச்சிட்டு வந்துடுறன்.." அவன் கூறவும் அவர் சற்று சிந்திக்க சிவா இவர்களை நோக்கி வருவது தெரிந்தது.

எத்தனையோ முறை கேட்டுட்டாரு என யோசித்தவர் "சரிப்பா பார்த்து அழைச்சிட்டு வாங்க..சதீஷும் உங்களோட வரட்டும்" என்றுவிட்டு நகர்ந்தார்.

அவர் செல்லவும் வினோ தலையைக்கோதிக்கொண்டு ஒருவாரு சமாளித்து விட்டோம் என பின்னால் திரும்ப அங்கு ஈஈஈ என பல்லை காட்டிக்கொண்டு தூக்கத்தில் நடப்பவன் போல் வந்து கொண்டிருந்தான் சதீஷ். இவன் எங்க போறான் என்று அவன் பார்வை சென்ற திசை நோக்கிய வினோ அங்கே இருந்த சிவப்பு தாவணி போட்ட பெண்ணைக்கண்டு தலையிலே அடித்துக்கொண்டான். இதுல மட்டும் அண்ணாவுக்கு ஏத்த தம்பி தான். தன்னை கடந்து செல்லப்போனவனை இழுத்துக்கொண்டே படியேறிச்சென்றான் வினோ.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now