"சாரூரு.."

"ப்ச் என்ன சக்தி ஆ ஊன்னா சாரு சாருன்னு இப்படி பக்கத்துல வந்து சத்தம் போடுறீங்க.. நான் இங்க தான இருக்கன்..அடுத்த தடவ போனதும் அம்மாட்ட சொல்லி பெயர மாத்தனும்.." காதை தேய்த்து விட்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டாள். பொறுமை பறக்க அவள் கையை பற்றி வெளியில் இழுத்தவன்.." உன்கிட்ட என்ன சொன்னன்.."என்றான் சக்தி கடுமையான் குரலில்.

அவன் இழுப்பிற்கே வெளியில் வந்து எழுந்தமர்ந்து நிதானமாய் வாயை அசைபோட்டு விட்டு.." கண்ண திறக்கும் போது அதோ அந்த இடத்துல இருக்க கூடாது சொன்னீங்க.." என்றாள் சாரு அப்பாவியாய்.

கோபப்படுவதா இல்லை சிரிப்பதா என தெரியாது போக இருந்தாலும் கோபம் பறந்து தான் விட்டது சக்திக்கு. சிரிப்பை அடக்கிக்கொண்டவன் சாருவை எழுப்பி நிறுத்தி நேராய் பாத்ரூமிற்கு கைபிடித்து இழுத்துச்சென்றான். அவன் இழுப்பிற்கே கண்ணை மூடிக்கொண்டு நடந்த சாரு..." காபியா.. ஹான் நல்லா சக்கரை போட்டு கொஞ்சமா.. இல்ல இல்ல கப் புல்லா..பெரிய கப்.." என ஏதோ புலம்பிக்கொண்டே இருந்தவளை ஷவரினடியில் நிறுத்தி அடுத்த அட்டார்க்கிற்கு தயாராக நின்று கொண்டே ஷவரைத்திறந்து விட்டான்.

திடுமென குளிர் நீர் தலையில் விழவும்..."சக்தி ச...த்.." பதறிக்கொண்டு பாயப்போனவளை சத்தமிட்டு சிரித்துக்கொண்டே இறுக்கப்பற்றிக்கொண்டான் சக்தி. துள்ளிக்குதித்து முடிந்தவள் குளிரிற்கு தன் உடல் பழகிவிட அங்கேயே நின்று கண்ணைத்திறந்து சக்தியை முறைத்துக்கொண்டு நின்றாள்.

சிரித்து முடித்த சக்தி அப்பபோதுதான் அவளைப்பார்க்க அவளது பார்வையும் அவள் நின்றிருந்த நிலையும் அவனுள் ஏதோ செய்ய சிரிப்பு மறைய அவன் பார்வை மாறியது. அதே நேரம் தன் குட்டி மூளையை வைத்து யோசித்து அவனை பழிவாங்குவதாக எண்ணிய சாரு அவனையும் பிடித்து ஷவரினடியில் இழுத்து விட்டு கைதட்டி சிரித்தாள். ஆனாலும் அவன் எந்த மாற்றமும் இன்றி தண்ணீர் வலிந்து செல்ல சாருவை அப்படியே பார்த்துக்கொண்டிக்க சாரு பயத்தில் மெதுவாய் நெருங்கி நின்று அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now