அவனைப்பார்த்து புன்னகைத்துவிட்டு காரிலிருந்து இறங்கி சென்றாள் சாரு. அவள் மறையும் வரை பார்த்திருந்தவன் தன் காரை கிளப்பிக்கொண்டு நகர அப்போது அவனுக்கு தெரியவில்லை இப்போது கண்ணில் இருந்து மறைந்த தன்னவள் வரும் காலத்தில் தன் வாழ்விலிருந்தே மறைந்திடும் காலமும் ஓர் நாள் வரும் என்று.

இந்த ராட்சசி கண்ணுல மட்டும் பட்டுட கூடாது.. என நிலா கண்ணில் படாது ஒழிந்து ஒழிந்து சாரதாவை தேடி சென்று கொண்டிருந்தான் மதன். எதிரே சாரதா கிளம்பத்தயாராகி தன் பைகளை ஏந்திக்கொண்டு வரவும் அவருக்கு பின்னால் நிலா வரவும் சரியாக இருந்தது...இவன் ஒழிவதற்குள் அவனைக்கண்டு கொண்ட சாரதா..

"டேய் மதன்.. அங்க எங்கடா போற.. இதோ இந்த பைய கொண்டு போய் கார்ல வை... நான் சாவித்ரிகிட்ட சொல்லிட்டு வந்துர்ரன்.."
அவர் பையை அவனிடம் கொடுக்க நீட்ட இடையில் வந்து புகுந்த நிலா..

"அய்யோ என்ன ஆன்டி நீங்க சிடியோட ஐ.பி.எஸ் அவர போய் பைய தூக்க சொல்லலாமா.. இங்க கொடுங்க ஆன்ட்டி நான் கொண்டு போய் வைக்கிறேன்.." அவள் கூறிக்கொண்டே பையை எடுக்க நடுவில் சாரதா தான் விழித்துக்கொண்டிருந்தார்.

"அது ஒன்னு இல்லம்மா.. இங்க பாருங்க டைம் ஆச்சில்ல.. நீங்க போய் சொல்லிட்டு வாங்க.. நான் கார எடுக்குறன்.." அவர் பேச முன்னே இவன் பேசி அனுப்பி வைத்து விட்டு நிலாவின் பின்னே ஓடினான்.

ஹாலைத்தாண்டி இருந்த சிறு நடைபாதையில் சென்று கொண்டிருந்தவள் முன் வந்து இடைமறித்தான் மதன். அவனை ஒரு பார்வை பார்த்த நிலா..."தள்ளுங்க.." என்றாள் ஒற்றை சொல்லாக..

அதே நிலையில் சற்றும் நகராது நின்று கொண்டிருந்தவனை அண்ணாந்து பார்த்தவளுக்கு அவன் உயரமும் பார்வையும் கண்டு உள்ளுக்குள் பயம் எழுந்தாலும் பேசாது மறைத்துக்கொண்டு அவனையே முறைத்துப்பார்த்தாள்.

"எதுக்கு இப்போ எல்லார்க்கிட்டயும் இதேயே சொல்லிட்டு சுத்துர..அதா நான் சாரி கேட்டுட்டேன்ல.."

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now