அவன் கண்ணயரும் வரை பார்த்திருந்தவள் அவன் கண்கள் சொருகும் நேரம்.."சக்தி சக்தி சக்தி.." என்று உலுக்கினாள்.

அவள் திடீர் செயலில் பதறி எழுந்த சக்தி என்ன என்றவாறு பதட்டத்துடன் எழுந்து கேட்க..இவளோ அப்பாவியை முகத்தை வைத்துக்கொண்டு.." ஈஈஈஈஈ பாருங்க.. பல்லு விலக்க மறந்துட்டன்.. " பல்லைக்காட்டி விட்டு கூறியவளை கொலைவெறியில் பார்த்த சக்தி இருந்தும் கோபத்தைக்காட்ட வழி இன்றி.."சரி போய்ட்டு வா.." என்றான்.

"இல்ல இல்ல நீங்க வந்து கதவுகிட்ட நின்டுகோங்க.. எனக்கு பயம்."

"ஹ்ம் வா.." குளியலறைக்கதவடியில் அவள் வரும் வரை தூங்கி வழிந்து கொண்டே தவம் இருந்தான் சக்தி. உள்ளே சென்ற சாருவோ பிறந்ததற்கே இன்று தான் முதல் தடவை பல் துலக்குவது போல் ஒவ்வொரு பற்களாக பார்த்து பார்த்து தேய்த்துக்கொண்டிருந்தாள்.

ஒருவாறு இருபது நிமிடங்களில் வந்தவள்..."சரி வாங்க போய் தூங்கலாம்." என்று விட்டு முதலில் சென்று கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள்.

பின்னால் வந்த சக்தி தன்னிலையை நொந்து கொண்டே தலை வைத்து படுத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் கேட்டது காதருகே இவனது டார்ச்சர் குயீனின் குரல்.."சக்க்தீதீதீ.."

"என்ன இப்போ.." குரலில் கொஞ்சம் கடுமை ஏறியிருந்தது இம்முறை.

"தண்ணீ வேணும்.."

எழுந்து மினி ப்ரிஜ் அருகே சென்றவன் தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டினான் சாருவை நோக்கி. அதனை கையில் வாங்காது உற்று உற்று பார்த்தவள்.."இது வேணாம்.. தொண்ட கட்டிக்கும்.. என்னமோ சொலுவாங்களே வார்ம் வார்ட்ட்ர்ன்னு அது வேணும்."

கடவுளே...தலையை சிலுப்பிக்கொண்ட சக்தி நேராய் கதவைத்திறந்து கொண்டு கீழே சென்றான்.

இதமாய் நீரை சூடுபடுத்தி எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பி சாருவிடம் கொடுத்தான். அதனை வாங்கி ஒரு மிடறு என்று கூட கூற முடியாத அளவு கண்களை உருட்டி இவனைப்பார்த்துக்கொண்டே பருகி முடித்தவள் பக்கத்தில் மேசையில் வைத்து விட்டு.."சரி இப்போ தூங்கலாம்." என்று விட்டு போர்த்திக்கொண்டு படுத்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now