பொறுமையிழந்தவளாக.."வினோ நான் சொல்லுறத கேட்குறயா இல்லயா..?"

அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டவன்.."பேபி கூல்.. முதல்ல நீ சொல்லு..சாரு கிட்ட நீ பேசினயா?" அவன் கேட்க இல்லை என்றாள் ரம்யா.

"ஹ்ம் அப்போ எப்படி நடந்தது தெரியும். அவள் நார்மல் கேர்ள் இல்லன்னு நீ சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணிற்கு தன்ன ஒரு விஷயத்துல இருந்து ஆபத்து அப்போ பாதுகாத்துக்க தெரியும். கண்டிப்பா நடந்தது சாருவிற்கு மட்டும் தான் தெரியும். நீ அவகிட்ட பேசு அப்போ தான் இனிமே நடக்க இருக்க ஆபத்துக்கல்ல இருந்தும் அவள காப்பாத்தலாம்..."

"ஹ்ம்ம்ம்.." சம்மதமாய் சிந்தனையுடனே தலையாட்டினாள் ரம்யா.

"சரி அதைவிடு நான் சொன்னது பற்றி யோசிச்சயா ரமி..?"

அவன் கேட்கவும் என்ன என்று சிந்தித்தவள் பின்தான் அவன் நேற்று இரவு தன்னிடம் பேசியது நினைவில் வர முகத்தில் கடுமை ஏற எழுந்து செல்ல முயன்றாள்.

"ரமி.." அவள் கைபற்றி இழுத்த வினோ அவளை தன்னருகில் அமர்த்தி தோளோடு அணைத்துக்கொண்டான்.

"பேசாம போனால் என்ன அர்த்தம்டா.."

"இது பற்றி பேச விருப்பம் இல்லன்னு அர்த்தம்.." முகத்தை அவன் பக்கம் இருந்து திருப்பிக்கொண்டாள்.

அவள் முகம் பற்றி தன்பக்கம் திருப்பியவன்.."இங்க பாருடா.. மனிஷங்கள்ள தப்பு செய்யாதவனே இல்ல அப்படி இருந்தா அவன் மனிஷன் இல்ல.. சிறியதோ பெரியதோ எல்லாமே தப்பு என்ற ஒரு வர்க்கத்துல தான் சேரும்..அது பார்க்கும் கண்களை பொருத்தது...தப்பு செய்ய செய்ய தான் அனுபவம் வந்து தங்களை சரி செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்குது. அந்த வாய்ப்ப கொடுக்குறது தப்பு செய்யிறவங்கள சுற்றி இருக்க மற்றவங்க தான். அதேநேரம் நீ செய்யிறது தப்புன்னு சுட்டி காட்டி புரிய வைக்கிறதும் அவங்களே தான்.
தப்பு செய்தவங்க சரி செய்து கொள்ள நேரம் வேணும்ல அதுபோல தான் மன்னிக்கவும் நேரம் வேணும்.. நான் இல்ல சொல்லல.. ஆனால் அந்த நேரம் வந்தத புரிஞ்சிகிட்டா மன்னிக்காம இருக்கது நம்ம பக்கம் மட்டும் தான்டா தப்பு.."

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now