"மேடம்.." வேலு நம்ப முடியாமல் இழுக்க.. பதிலுக்கு சிரித்து விட்டு ராகுலை கையாலே சைகை காட்டி போகச்சொல்லி விட்டு.. "இதுல இரண்டு கோடி இருக்கு.. " வேலு தொடர்ந்து ஏதோ பேச வர கையசைவால் தடுத்தாள்.

"உனக்கு நான் சொன்னது நினைவிருக்கும் நினைக்கிறேன்.  இனிமே என் வழில நீ வர கூடாது.. ஏதாவது இந்த விஷயத்தில நீ மாட்டினாலும் என் பக்கம் உன் கை நீள கூடாது.. அதுக்கெல்லாம் சேர்த்து தான் நீ கேட்டதுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கேன்.. புரிஞ்சதா ? இல்ல புரியலன்னா உனக்கு வேற பாஷையில சொல்லனுமா" தீக்ஷா பேச பேச வேலு அவசர அவசரமாய் தலையை ஆட்டினான். பின் அவன் ஏதோ கூற வரவும் கை நீட்டி தடுத்தவள் தன் வாயில் கை வைத்து பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்து விட்டு அவனை போகச்சொன்னாள்.

வேலுவும் சரி என்று அந்த பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர..
"வேலு ஒன் மினிட்.." என்று மீண்டும் அவனை அழைத்தாள்.

திரும்பி பழைய இடத்திற்கே ஓடி வந்து கைகட்டி நின்றான் வேலு. "என்ன மேடம்.."என்றான் பணிவாய்.

"இப்போவே எந்த முயற்சியும் வேணாம். கொஞ்ச நாள் போகட்டும்.. பொலீஸும் இப்போ ரொம்ப தீவிரமா இருப்பாங்க.. " தீக்ஷா பேச வேலுவும் எப்போதும் போல் தலையை ஆட்ட, அவளது கை அசைவிற்கு காத்திருந்து விட்டு அது கிடைத்ததும் பணப்பையை அள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் வேலு.

*******

மயக்க மருந்தின் வீரியத்தில் தன் புலம்பல்களை நிறுத்தி விட்டு அவன் அறையில் கண்ணயர்ந்திருந்தான் சக்தி. இருந்தும் முனகிக்கொண்டே இருந்தவன் அருகில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான் வினோத்.

அவன் அருகில் வந்து தோள் பற்றிய வினிதா.." வினோ நீ கேட்ட எல்லாம் இதுல இருக்கு.." என்றவாறு அந்த கவரை அவனிடம் கொடுத்தாள். ஓர் நன்றியுடன் அதனை வாங்கிக்கொண்டவன் முதலாவதாய் அந்த சிசிடிவி வீடியோவை கொண்டிருந்த பென்ட்ரைவை லேப்டாப்பில் இணைத்து அதனை பார்வையிட வினிதாவும் ராஜேஷும் சேர்ந்துகொண்டனர்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now