"அண்ணாவ பேய் விரட்ட கூட்டிட்டு போலாம்டா.."கவலையாய் கூறிய நிலாவை முறைத்தவன்.."இப்பதான்டி அவன் மனுஷனாகவே மாற ஆரம்பிச்சிருக்கான்..அதையும் நீ விரட்டிறாம கம்முன்னு இரு..சீன் பார்த்தமா போனமான்னு இரு.." சொல்லிவிட்டு மீண்டும் அங்கு நடப்பதை கவனிக்கத்தொடங்கினான் சதீஷ்.

"சார்...அம்மா.." சாரு கூற சட்டென கையை விட்டான் சக்தி..
கிடைத்த சந்தர்ப்பத்தில் சமையலைக்குள் பதுங்கிக்கொண்டாள் சாரு.

அவள் மூச்சிரைக்க ஓடி வருவதைக்கண்ட சாவித்ரி அவள் நெற்றியில் கைவைத்துப்பார்த்து விட்டு என்னாச்சி என்று கேட்க..

"ஒன்னுமில்லம்மா காபிபி..." என்றாள் இருக்கும் பற்கள் அத்தனையும் வெளியில் தெரிய..
"இதுக்குதானா இந்த ஓட்டம்.."அவர் கேட்டு விட்டு திரும்பி காபியை கையில் கொடுக்க மீண்டும் கனவுலகத்திற்கு சென்றிருந்தாள் சாரு.

"சாரு என்ன யோசிக்கிற?" அவர் கேட்க சாருவோ "எந்த தாயிற்கு தான் தாங்க முடியும் தன் மகன் மூளையில் கோளாறு என்றால்..நாமதான் இத யாருக்கும் தெரியாம சரியாக்கனும்.."  என நினைத்துக்கொண்டு "ஈஈஈஈ ஒன்னுமில்லம்மா" என்றாள் காபி கப்பை வாங்கியபடியே.

இவளுக்கு என்னாச்சி என்று பார்த்துவிட்டு சக்திக்கு காபி எடுத்துக்கொண்டு நகர்ந்தார் சாவித்ரி.

ஒருவாரு அடுத்த அரைமணிநேரமும் சக்தியின் கண்ணில் அகப்படாமல் இருந்தவள் அவன் சென்ற பின்னே சிவாவுடன் கம்பனிக்கு சென்றாள். உள்ளே செல்லும் போதே அங்கு வந்த டேவிட்..சார் கூப்பிட்டாரு என்று சொல்லிவிட்டு செல்ல படபடப்புடனே அவன் அறைக்கு சென்றாள் சாரு.

அங்கு சக்தி விட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதை கண்டவள் கவலையுடன் அவன் அருகில் சென்று "சார்.." என்றாள்.
அதே நேரம் அங்கே வினோதும் வந்து கதவில் தட்ட.."கம் இன்.." என்றான் சக்தி.

இருவரையும் பார்த்து விட்டு பேசத்தொடங்கினான் அவன்.
" அடுத்து வந்திருக்க திருமண ஆடர் இன்னும் இரண்டு வாரத்துல ஒப்படைக்கனும். என்ட் அதுக்கான துணி இன்னக்கி ரெடியா இருக்கும். Address a நான் wtsp grp இல் போட்டுடன். உங்க டீம்ல யாராவது இரண்டு பேர் போங்க இப்ப போனால் தான் ஈவ்னிங்குள்ள வந்துடலாம். ஓகே.."

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now