அவளை அழைத்துக்கொண்டு மேடை ஏறப்போனவன் தீக்ஷா அருகில் கொஞ்சமாய் தாமதித்து  " finally its me..." என்று கூறிவிட்டு செல்ல...
கோபத்தை அடக்க வழி அறியாது அவன் போகும் திசையிலேயே இயன்றளவு முறைத்துக்கொண்டு இருந்தாள் தீக்ஷா..ஆனால் அவளது உதடுகள்  மட்டும்..இதுக்கெல்லாம் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவ சக்தி என்று முணுமுணுத்தன..

சக்தியின் பின்னே அவன் இழுப்பிற்கே நடந்தாள் சாரு..மேடை ஏறிய இருவரையும் ஆடைகளை ஆடர் தந்த மணமகளின் தந்தையே முன்னால் வந்து அழைத்து தன் கையால் விருதை வழங்கிவிட்டு.." என்ன தம்பி நீங்க இரண்டு பேரும் ஹஸ்பன்ட் என்ட் வைப்பா சொல்லவே இல்ல பாருங்க.. ஆனா பொருத்தம் ரொம்பவே நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.." அவர் கூறி முடியவும் சக்தி எதிர்பார்த்தது போலவே சக்தியின் கையை இழுத்து அவனை அவள் உயரத்திற்கு குனிய வைத்த சாரு..." ஹாஸ்பன்னு வைபு ன்னா என்னது?" கிசுகிசுப்பாய் அவள் வினவ..

" நான் பாஸ் நீ என்கிட்ட வேலை செய்யுற அத தான் அப்படி சொல்லுறாங்க.." என்று அவன் விளக்கவும் அவளும் அழகாய் சிரித்து புரிந்ததாக தலையாட்டினாள். ஆனால் சக்தி அறியவில்லை தன் சுயநலத்திற்காய் இன்று கூறிய பொய் சாருமதியின் வாழ்வையே நாளை புரட்டிப்போடும் என்று.

"அப்போ இது எதுக்கு? " அவள் அந்த விருதை சுட்டிக்காட்டி கேட்க..
அது என்று கொஞ்ச நேரம் சிந்தித்தவன்.." அது நீ அந்த ட்ரெஸ் எல்லாம் அழகா செய்து கொடுத்ததுக்கு." அவன் கூறவும் சாருவும் சரி என்று நின்று கொண்டாள்.

மேடையின் கீழ் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்.
"சார் இன்னக்கி ஷோ நீங்க இரண்டு பேரும் தான் செய்யனும்..கம் ஆன்..ஒரே ஒரு டான்ஸ்" என்று கூச்சலிடவும் பின்னனியில் பாடலும் ஒலித்தது...

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

சாரு திரு திரு என விழிக்க அவளருகில் வந்த சக்தி அவள் இடை பற்றி தன்னுடன் இணைத்து மறுகையை அவள் கையுடன் பிணைத்து கொண்டான்..."சார்..என்..ன பன்னுறீங்க.." சாரு கையை விலக்க முயலவும்.."உஷ்.."என அவள் இதழ் மேல் ஒற்றை விரலை வைத்து அமைதிப்படுத்தினான் சக்தி. சாருவிற்கு அந்த தீண்டல் உள்ளே சிலிர்க்க கண்களை விரித்து சக்தியை பார்த்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Wo Geschichten leben. Entdecke jetzt