"அடுத்தது என்ன எரும..?"
அவள் செய்கையை பார்த்து சலிப்புடனே வினவினான் சதீஷ்

"ஒரு வேளை நாம மாட்டிக்கிட்டா.."
இடையில் அவனின் முறைப்பைக்கண்டு
"அதில்லடா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும்ல..சோ அப்பிடி மாட்டிக்கிட்டா என்ன ப்ளான்...?" ஏதோ அட்வன்ச்சர் பயணம் போவது போன்ற பாவனை தான் அவள் முகத்தில்.

சிறிது நேரம் யோசித்தவன்..
"நம்ம ஜிம்மி உள்ள போயிரிச்சி அத பிடிக்க வந்தம் சொல்லலாம்." வழி கண்டுவிட்ட சந்தோஷத்தில் கண்கள் மின்ன சதீஷ் கூற

"ஏஹ் ? அது யார்டா ஜிம்மி?" புரியாது கேட்டாள் நிலா..

"அதான் நாம வளக்குற எலி ச்சச்ச இல்ல அணில்.." என்றான் சதீஷ்.

"நாம எப்போ வளர்த்தம் அத?"
அவள் மீண்டும் யோசிக்க..

"வளர்க்கல்ல தான்..இந்த one hour ற்கு தத்து எடுத்துக்கலாம்.."
இப்போது அவள் முறைக்க..
"இப்ப உனக்கு சைன் வேணுமா வேணாமா..சும்மா கேள்வி கேட்டுட்டே இருந்த போய்டுவேன் நான். மாட்டிக்கிட்டா நீ ஒன்னும் பேச கூடாது சொல்லிட்டன்.வாய மூடிக்கிட்டு இரு அது போதும். வா இப்போ"

மீண்டும் அவன் கதவை திறக்க போக.."சதீஷ் சதீஷ் இரு இருடா.." என்று தடுக்க அவன் முறைத்த முறைப்பில் "ஹி ஹி பைனல்டா.." என்று அவனை பார்த்து கண்சிமிட்ட
தலையில் அடித்துக்கொணடவன் "சரி கேளு இங்கயே one hour ஆகிறும் பாரு" என்று கதவில் சாய்ந்து நின்றான் சதீஷ்.

"அதெல்லாம் ஆகாது..நீ சொல்லு... என்னன்னா ஜிம்மி நாய்க்கு வைக்குற பெயர் போல இருக்கேடா.." நிலா இப்போதாவது எதாவது உருப்படியாக கேட்பாள் என நின்றிருக்க அவள் கேட்ட கேள்வியில் அதே கதவில் தலையை முட்டிக்கொண்டவன்..

"என் பொறுமைய நீ ரொம்பவே சோதிக்கிற..இதெல்லாம் ஒரு கேள்வியடி வேணும்டா டிம்மின்னு வச்சிக்கோ..இனிமே ஒரு கேள்வி கேட்டாலும் நான் போய்டுவன் சொல்லிட்டன். "
தலையை அவசர அவசரமாக ஆட்டியவள் வாயை மூடிக்கொள்ள..அவன் கதவைத்திறந்தான்..

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now