ஆனா நேத்து அவுக எங்கயோ வெளியூருக்கு போயிடாங்களாம். அதான் நேசன் இன்னிக்கி காலேலயே  வீட்டுக்கு வந்துட்டான்."

அவளுடைய சிவனேசன் அத்தான் வந்து விட்டார் என தெரிந்ததுமே அவரை காண கண்கள்  ஏக்கம் விட்டன.

அவரை எப்படி காண என்று யோசிக்கும் போதே அவளுடைய மூத்த உடன்பிறப்பு அதற்கான வழியை வகுக்க  தொடங்கினார்.

" வீட்டுக்கு வரச்சொல்லுப்பா.  எம்புட்டு வருசமாச்சுசிவனேசன் ஐ பார்த்து." என வந்து அமர்ந்தார், நடராஜர்.

" அண்ணே உங்க எல்லாரையும் பார்க்க இங்க  வரேன்னு தான் சொல்லிருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துரும் மாமா."

சிவனேசன் சற்று நேரத்தில் வந்துவிடுவான் என அறிந்ததும் தட்டில் கைகழுவி வேகமாக தன் அறைக்குச் சென்றாள், மகாலட்சுமி.

அறைக்குச் சென்று கதவை அடைத்து, அவள் தன் படபடப்பைக் குறைக்க எண்ணி நெஞ்சை தன் கைகளால் தாங்கி, கதவில் சாய்ந்து நின்று கொண்டாள்.

அவனை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கப் போவதை நினைக்கும்போதே சந்தோசத்தில் முகமெங்கும் புன்னகை பரவிட கண்களோ வெட்கத்தில் இமையை மூடிக்கொண்டது.

' ஐயோ அத்தான் இப்போ வந்துருவாரு. இப்போ என்ன பண்ண ' என எண்ணியவள், அவளுடைய மரத்தினால் ஆன சிறிய அலமாரியைத் திறந்தாள்.

அலமாரி முழுவதையும் புரட்டியெடுத்து சிவப்பு வர்ண தாவணியை கையில் எடுத்தாள்.

'இந்த நிறம் அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும்.' என நிமிடத்தில் அந்த தாவணிக்கு மாறி, சடையை நன்கு இழுத்து பின்னல் இட்டாள்.

பின் நினைவு வந்தவளாய் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தவளை இடைமறித்து நின்றான், சிவபெருமாள்.

"மகா, மெதுவா.... எதுக்கு இவ்வளவு வேகமா ஓடி வர்ற...."

" அது...வந்து ... அத்தான்..." என திணறியவளிடம் குறுக்கிட்டான்,

" மகா நீ இந்த தாவணியில அழகாயிருக்க...." என அவளை உச்சி முதல் பாதம் வரை ரசிக்க,

நீயே என் ஜீவனடிTahanan ng mga kuwento. Tumuklas ngayon