வெள்ளி விழா 💕

410 15 62
                                    

ஆயிரம் எதிர்ப்புக்கு பின் காதலித்து கரம் கோர்த்து பிடித்த கரத்தை நொடியும் விடாத இருவர்...

மகத்தான உறவான மாங்கல்ய பந்தத்தை மனதோடும் மகிழ்வோடும் கடக்கும் இருவர்....

இல்லறத்தின் நல்லறமாய் ஆசையின் ஆசைக்கே நாலு செல்வங்கள் கொண்ட உயிரின் உயிர்கள்...

பெற்ற பிள்ளைகள் அனைத்தும் பெண்ணா என யார்கேட்டாலும் அனைத்தும் பெண் சிங்கம் என்று நெஞ்சை நிமிர்த்தும் தந்தை...

சிறிதாய் செய்யும் தவறுக்கும் பெரிதாய் அறிவுரை வழங்கி பேரிடர் தாண்டி சிறிதும் கலங்காமல் காத்திடும் தாயவள்...

ஆணாதிக்கம் துளியும் இன்றி தவறு தாம் செய்தால் கட்டினவளிடமும் தன் உயிரால் உருவாகிய மகவுகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காத தந்தை..

வானாய் தந்தையவன் காத்திட அதன் நிலவாய் தாயவள் அர்த்தம் தந்த எங்களின் வாழ்வுக்கு தீப சுடராய் விளங்கி....

வாழ்ந்த இருபத்தைந்து ஆண்டிலும் இன்பத்துன்பத்தை சேர்ந்தே கடந்து இமியும் ஈன்றெடுத்த பிள்ளைகளிடம் துன்பம் நெருங்கவிடாது காத்த ஜீவன்களின்... .

ஆனந்த வெள்ளிவிழாவில் இதே அதீத அன்போடு நீங்கள் நோய் நொடி இன்றி காலம் முழுக்க வாழ்ந்திட...

என்றும் உங்களின் அன்பில் அடிபணிந்து எங்கள் காலம் முடியும் வரை  உங்களின் ஆசியுடன் வாழ்ந்திட வேண்டும்....

எங்களுக்கு நடைபழகி கொடுத்த  அன்பின் உயிர்கள் நடைதளரும் நேரம் தாயை இருந்து காத்திட தான் இவ்வுயிர்..

இனிவரும் காலங்களில் துன்பங்கள் தூர பறந்து இன்பங்கள் இணைத்து கொண்டு புன்னகை முகத்தோட உங்கள் கனவுகள் முழுதும் நிறைந்து வழிய இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அப்பா அம்மா .... ..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now