கண்கள்

95 23 91
                                    

முத்தமிழும் ஏங்கி
தவிக்கிறது பெண்ணவள்
விழி அசைவில் உள்ள
மொழிதனை படிக்க.... 

உன் ஒற்றை
கண்ணசைவிலே 
ஆயிரமாயிரம் மௌன
மொழிகளின்
அர்த்தம் படிக்கிறேன்..,,,,,

மைவிழி கண்டு
விழுந்த நான் 
இன்று மாயவிழியில்
சிக்கியது போல்
கட்டுண்டு கிடக்கிறேன் 
அவள் அழகிய விழிதனில்......

விழிகளுக்குள் புதையல்
உள்ளதோ ஆழ்ந்து
பார்க்கையில் எண்ணற்ற
உணர்வுகள் அவள்
கயல்விழிகளுக்குள்..   .,,,

உன் விழி அசைவிற்க்காக
என் விழி இரண்டும்
இமைக்காமல் காத்திருக்கிறது
நீ இமை மூடி திறக்கும்
அழகை ரசித்திட..........

யாரும் அறியமுடியாத
அற்புத காவியம் அவளது
விழிகள் இன்று ஆசைப்பட்டு
படிக்கிறேன் அதனின் 
அர்த்தங்கள் அறிந்திட.........

கன்னியிவள் கண்களுக்குள்
கவிதைகள்  மட்டுமின்றி
கவிஞனும் தொலைந்தானோ
இல்லை கவிஞன் தொலைந்த
பின்தான் கவிகள் பிறந்ததோ  !!!!!!!

ஆசைகள் ஆயிரம் Tahanan ng mga kuwento. Tumuklas ngayon