கண்ணாளனே

124 17 74
                                    

கண்ணாளனே இது நான் எழுதும் கவிதை அல்ல உனக்காக நான் கிறுக்கும்  என் இதயத்தின் கிறுக்கல்...

என்னையே எனக்குள் தொலைத்து உன்னை தேடுகிறேன் உன் வரவை காணவில்லையே பொக்கிஷம் எளிதில் கிடைக்காதோ...

இரவில் அழகான நிலவொளியில் உன் நினைவோடு  நகர்கிறது...

இந்த அழகான இடைவெளி இம்சை படுத்துதே
துணையாக நீ வந்து தூரம் குறைத்து உன் விரல் கோர்த்து உனை நான் இம்சிக்கவேண்டுமே...

காத்திருப்பதில் கூட இத்துணை சுகம் என அறிந்தது உனக்காக காத்திருக்கும் இவ்வேளை தானே...

காத்திருப்பின் பலன் கிட்டியதும் காதலோடு சண்டையிடுவேன் நாளை தூது புறவாய் உன் முத்தத்தை மட்டும் அனுப்பாதே மொத்தமும் மறந்துவிடும் எனக்கு...

கவிதையோடு காலம் நகர்கிறது காதலோடு உனை காண விழி ஏங்குகிறது..

உனை காணும் வேளை புரியாத வார்த்தை பிறக்கும் அதனின் விளக்கம் என் விழி கண்டு புரிந்து கொள்ளடா ஆயிரம் விளக்கவுரை தரும்...

உன்னோடு சேர்ந்து உயிர்பெற்று உள்ளம் மகிழ்ந்து உனக்குள் புதைந்து உறவாட வேண்டுமடா என்னவனே....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now