காதலின் வலி

131 26 65
                                    

காதலித்தால்  கவிதை வருமென 
தெரியும் ஆனால் கண்ணீரோடு 
வரும் என தெரியாமல்
போனதேனோ

இன்ப கூட்டுக்குள் இணைத்து
இருந்த நம் கூட்டுக்குள் இன்று
இடி  விழுந்ததேனோ 

காதலின் இனிமையை  மட்டும்
ரசித்த  என்னால் அதன்
தனிமையை  சகிக்க  முடியாமல்
போனதேனோ

உறக்கத்தை  மறந்து காதல்
செய்து இன்று காதலின்றி
உறக்கமின்மை  நீள்கின்றதேனோ 

நிஜமாய்  நாம் கொண்ட காதல்
அனைத்தும்  இன்று கனவு
பெட்டகத்தில்  அடைந்ததேனோ 

சண்டையிடும்  போது இதழ் 
அனைத்து  முற்றுப்புள்ளி
வைத்துவிட்டு  இன்று
சண்டையிட்டு என்னை திட்டகூட
நீ இல்லாமல் போனதேனோ

உன் செல்ல சீண்டலுக்கும் 
கோபத்துக்கும்  இன்று
ஏங்குவதேனோ 

பசுமை பூமியாய் செழித்த 
நம் காதல் இன்று வறண்ட
பூமியாய் மாறியதேனோ 

உன்னோடு விடிந்த  விடியல்
அனைத்தும் இன்று உன்
நினைவுகளில் மட்டும்
விடிவதேனோ 

பரிசு  கொடுக்க பிடிக்காது
என கூறிவிட்டு  பிரிவு
என்னும் காதல் வலியை
பரிசாக  கொடுத்து
சென்றதேனோ   

அளவில்லாமல்  நாம் செய்த
காதல் இன்று அழியாத
நியாபகளை  மாறியதேனோ

மூளை உன்னை மறக்க 
நினைத்தும்  இந்த
பாழாப்போன மனது
வெடித்து   அழுவதேனோ

நீ என்னை பிரிந்தால் நான்
நடைப்பிணம்  தான் என்பதை
நீ மறந்ததேனோ 

நேற்றைய நிஜங்கள்  அனைத்தும்
இன்று பொய்யென்பது உரைக்காமல் போனதேனோ

நம் கட்டிய காதல் கோட்டை  இன்று
நிமிடத்தில்  சரிந்ததேனோ

உடைந்த என் இதயத்தின்  சில்லுகள்  அனைத்திலும்  உன் நினைவுகள் 
மட்டும்  உள்ளத்தேனோ 

இந்த விசித்திரமான  மனது
வேண்டாம் என்று கூறிய உன்னை
மட்டும் நினைத்து இன்று
துடிப்பதேனோ 

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now