சின்ன சின்ன ஆசை

65 20 62
                                    

சின்ன சின்ன ஆசைகள் அனைத்தும் மொத்தமாய் சேர்த்து வைக்கிறேன் உனக்காக...

என் ஆசை அனைத்தும் அறிந்து அதை நீ மறுத்திட ஆசை...

மறுத்த நீயே மீண்டும் அதை செய்ய சொல்லி அடம் பிடித்திட ஆசை...

வேஷ்டி சட்டையில் நீ மீசை முறுக்கும் அழகை நான் மட்டும் ரசித்திட ஆசை..

நான் அருந்தும் தேனீர் நீ வாங்கி பருகிட ஆசை...

மழையோடு குடைக்குள் என் காதில் நீ ரகசியம் பேசிட ஆசை...

நெடுந்தூர பயணத்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து உன் தோள் சாய்ந்து வர ஆசை...

மழலை போல் உன் மடியினில் உறங்கிட ஆசையோ ஆசை..

உன்னிடம் பேச நிதமும் ஆயிரம் கதை எனக்குள் தோன்றிட ஆசை...

உன் விழியினில் என் வலிகள் முழுதும் மறக்க ஆசை..

உன் அருகில் கவலையின் கண்ணீர் சிந்திட ஆசை...

அதை உன் கரம் கொண்டு நீ துடைத்திட ஆசை...

நீ தரும் முதல் முத்தம் தொலை பேசியில் இல்லாமல் என் கண்பார்த்து நெற்றி ஒற்றிட ஆசை...

என்றும் உனக்காக நான் இருப்பேனடி கண்ணம்மா என உன் மொழிதனில் ஒரு முறையாவது கேட்டிட ஆசை...

ஆசைகள் அனைத்தும் உன்னால் மட்டுமே நிறைவேறிட ஆசை....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now