🙊

68 17 98
                                    

கவிதை எழுத காதல் மட்டும் தான் வேண்டுமா ரசனை இருந்தாலே போதுமே...
நேற்றுவரை இப்படி தானே யோசித்தேன் எதையோ தேடி எப்படியோ வடித்தேன்....
இன்று என்னையே தேடுகிறேன் உன் விழிகளுக்குள் உன் பின் இழுத்த மாயமென்னவோ...
தனிமையை ரசித்தேன் இன்று அந்த இடைவெளியிலும் உன் நினைவுகள் ஆட்கொண்டது..
மொத்தமாய் மாறிப்போனேனே உன் அன்பால் எனை ஆதிக்கம் செய்ய நீ தொடங்கிவிட்டதால்..
வாழ்க்கையின் வெறுமை மாறிப்போனது உன் வருகை அதை வசந்தமாக்கியதால்..
அழகான பயணம் அரங்கேறுகிறது உன் காதல் கரம் கோர்த்து...
உன் மௌனத்தின் ஆறுதலில் மொத்தமாய் தொலைந்துவிட்டேன்...
விரும்பியே தொலைந்தேன் உன்னிடத்தில் ஏதோ சிந்தனைகள் பல இருந்தும் இன்று எல்லாவற்றிலும் முதலாய் நீயே...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now