"என்ன டெட் பாடியா ..! அதுக்கு ஏன் நான் சிபிஐ ஆக நடிக்கனும்..?"

"சிபிஐ யா..? " குழம்பி போனான் செந்தில் " மேடம் கண்ணாடில உங்கள பாத்திருக்கீங்களா..உங்கள சிபிஐ னு சொன்னா எந்த மடையனாச்சும் நம்புவானா.. உங்கள தவிர " என சொல்லி முடிப்பதற்குள், டிவிஎஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்தது போல் பிண்ணணியில் சிரித்தான் ட்ரைவர் வாசு.

காயத்ரிக்கு அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோபம் மண்டையைத் தாண்டி கொண்டை வரை ஏறியது.
செந்தில் வேறு ஏதோ சொல்ல முயல, பாட்சா ரஜினி போல அவனை ஒரு முறை முறைத்தாள்.
"நான் இப்போ என்ன செய்யனும்.." என்றாள் காயத்ரி.

"மேடம் இப்போ சஸ்பென்சன்ல இருக்காங்க வேற எந்த கேஸ்லயும் தலையிட கூடாதுனு ஸட்ரிக்டா சொல்லிருக்காங்க.. அதனால.." இழுத்தான் செந்தில்

" சுத்தி வளைக்காம டேரக்டா மேட்டருக்கு வரேலா..!" இன்னும் பாட்சா மோடிலேயே இருந்தாள் காயத்ரி

"மித்ரன வச்சிருக்க மார்ச்சுவரில தான் இன்னொரு லாரி ட்ரைவரையும் வச்சிருக்காங்க.. அதான் நீங்க அவன் வொய்ப்பா நடிச்சீங்கன்னா.."

"என்னது .. யாரை பாத்து பேசரேள்... போலீஸனு பாக்கறேன்" கண்ணை உருட்டினாள் காயத்ரி.

"கோவப் படாதீங்க, அக்கா தங்கச்சினா ரொம்ப நோண்டுவாங்க .. அதான் வொய்ப்னு சொன்னா ஈஸியா விட்டுருவாங்க.. வேற வழியில்ல மேடம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ரெண்டு மினிட்ஸ் தான் எல்லாம் முடிஞ்சிரும் .. ப்ளீஸ் .."

செந்தில் ஒரு புறம் கெஞ்சிக் கொண்டிருக்க, காயத்ரி மனதில் கார்கில் போரே நடந்துக் கொண்டிருந்தது, இதை விட்டால் வேறு வழியில்லை என்பதும் அவளுக்கு புரிந்ததால், மனமின்றி ஒத்துக் கொள்ள தயாரானாள்,

"நான் எங்கேயும் அவன் வொய்ப்னு சொல்ல மாட்டேன், நீங்க தான் பேசிக்கனும்"

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now