உப்.. பெருமூச்சோடு சக்தி சாரு இருந்த இடம் நோக்கி நடந்தான்.  இவன் சாரு அருகில் சென்று நிற்க அதை கூட கவனிக்காது வெகு தீவிரமாக தன் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

அங்கு சாருவை தவிர யாருமில்லாததை நோட்டமிட்ட வண்ணம் அவள் பின்னால் சென்று குனிந்து காதருகில் இருந்த முடியை ஊதிவிட திடுக்கிட்டு திரும்பியவள் சுதாரிக்க முன் அவளது நோட்டை எடுத்திருந்தான் சக்தி.

இதை சற்றும் எதிர்பாராத சாரு..

"சார் சார் அதை கொடுங்க..அத எதுக்கு எடுத்தீங்க நீங்க.. இங்க கொடுங்க சார்.." அவனிடம் இருந்து பிடுங்க முயன்றாள்.

சக்திக்கு அவளது பதட்டத்தை பார்த்தவுடன் ஆர்வம் மேலோங்க.. "ஹே இரு இரு.. நான் சும்மா தான் பர்ஸ்ட் இதை எடுத்தேன்.. உன் பதட்டத்த பார்த்தா இதுல ரொம்ப முக்கியமா எதுவோ இருக்கும் போலவே.." என அவளுக்கு எட்டாதவாறு அதனை உயர பிடித்தவண்ணம் பார்த்தான்.

அது அவளது டயரி என புரிய என்ன எழுதி இருப்பாள் என ஆர்வமாய் அதன் பக்கங்களை திருப்பினான் சக்தி.

"சார் அடுத்தவங்க எழுதினத இப்படி படிக்கிறது தப்பு..கொடுங்க அதை.." கோபமாய் சாரு கூற சக்திக்கோ அவளது கோபம் சீறும் குட்டிப்பூனை போல் தெரிந்தது.

"அது உனக்கு தெரியாம படிச்சாதான் தப்பு நீ இருக்கப்போ படிக்கலாம்.." தாள்களை திருப்புவதில் மும்முரமாய் இருந்தான் சக்தி.

அவன், அவள் கடைசியாய் எழுதியிருந்த பக்கத்தை அணுகுவதை உணர்ந்த சாரு..சட்டென அங்கிருந்த கதிரை மேல் ஏறி அவனிடம் இருந்து டயரியை பிடுங்க முயல சக்தி சுதாரித்து பின்னகர இதை எதிர்பார்க்காத சாரு தடுமாறி அவன் மேலே சரிந்தாள்.

நல்ல வேளை கீழே விழுந்த சக்திக்கு அடி ஏதும் பெரிதாக இல்லை என அவனை முதலில் அவசரமாய் ஆராய்ந்தன சாருவின் கண்கள். அவனை பார்த்து விட்டு அவன் கண்களை சந்தித்தவளுக்கு அங்கு தெரிந்த மாறுதல் எதையோ உணர்த்த விழித்துக்கொண்டே குனிந்து பார்த்தாள். அப்போதுதான் புரிந்தது அவள் சக்தியின் மேல் இருப்பது.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Wo Geschichten leben. Entdecke jetzt